ஐரோப்பா

குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஆணையம் புதிய முன்மொழிவு

  • September 16, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) , குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கிய முன்மொழிவை முன்வைத்துள்ளார். அதன்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருட்களைப் பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்ய முன்மொழிந்துள்ளார். அவரது முன்மொழிவின்படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோரின் மேற்பார்வையின் கீழ் பராமரிக்கப்படும் சிறப்பு “மினி கணக்குகள்” மூலம் மட்டுமே சமூக ஊடகங்களைப் […]

உலகம்

காசாவில் முழு அளவிலான போர் – இஸ்ரேல் காட்ஸ் அறிவிப்பு

  • September 16, 2026
  • 0 Comments

காசாவில் முழு அளவிலான போரை மீண்டும் தொடங்கவும், அங்குள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்  என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 27 ஆம் திகதி இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மற்றொரு வலதுசாரி போட்டியாளரிடமிருந்து வந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் காட்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது நடக்கப்போவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஹமாஸை ஒழிப்பதற்கான உத்தரவு கிடைத்தவுடன், […]

உலகம்

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 60 பேர் உயிரிழப்பு

  • September 16, 2026
  • 0 Comments

சூடானில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானின் மேற்கு கோர்டோஃபான் Kordofan மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருக்கலாம் என உள்ளுர் சமூகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், அவசர மீட்பு நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டி, நேற்றைய தினம் (செவ்வாய்க் கிழமை) ஒருவர் உயிருடன் வெளியே வந்ததாகவும், அவர் இன்னும் சிலர் உயிருக்கு போராடுவதாக தெரிவித்ததாகவும் […]

உலகம்

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

  • September 16, 2026
  • 0 Comments

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசியை Hashim Thaci போர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் இன்று இவ்வாறு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1990-களில் செர்பியாவிலிருந்து கொசோவோ வன்முறையாகப் பிரிந்தபோது, ​​அல்பேனிய இனத்தைச் சேர்ந்த கொசோவோ விடுதலைப் படையின் (KLA) உயர்மட்டத் தளபதியாக இருந்த தாசி (58), கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் காவலில் வைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

உலகம்

தாமதமாகும் மழைக்காலம் – காட்டுத்தீ பரவல் குறித்து இந்தோனேசிய அரசாங்கம் எச்சரிக்கை

  • September 16, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் காட்டுத்தீ நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலத்தைச் சுத்தம் செய்யத் தீயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ‘சூப்பர் எல் நினோ’ (super El Nino) வானிலை நிலவரத்தால் நாட்டின் காடுகளும் விளைநிலங்களும் வறண்டு போயுள்ள நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான காட்டுத்தீயை இந்தோனேசியா எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளில் பல வாரங்களாகத் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. எல் […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கைகளில் குறிப்பிடப்படாத இணை உறுப்பினர் (associate member) தகுதியை கனடாவிற்கு வழங்குவதற்கான கதவை ஐரோப்பிய ஒன்றியம் திறந்து வைப்பதாக அதன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

கனடாவுக்கு ‘இணை உறுப்பினர்’ தகுதியை வழங்க EU முடிவு

  • September 16, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கைகளில் குறிப்பிடப்படாத இணை உறுப்பினர் (associate member) தகுதியை கனடாவிற்கு வழங்குவதற்கான கதவை ஐரோப்பிய ஒன்றியம் திறந்து வைப்பதாக அதன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார். வான் டெர் லேயனின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். வரலாற்று ரீதியாக இவ்வாறான நெகிழ்வுத்தன்மை கொண்ட வகைகளை எதிர்த்து வந்த ஐரோப்பிய ஒன்றியம், மே மாதத்தில் உக்ரைனுக்கு முழுமையான உறுப்பினர் அங்கீகாரத்தை […]

ஏயர்பஸ் (Airbus) விமானக் கொள்முதலின் போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. இலங்கை செய்தி

நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

  • September 16, 2026
  • 0 Comments

ஏயர்பஸ் (Airbus) விமானக் கொள்முதலின் போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. அத்துடன், நாமல் ராஜபக்சஷவின் பிணை விண்ணப்ப கோரிக்கை தொடர்பான தீர்மானம் செப்டம்பர் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

"ஒற்றையாட்சியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை என்ற கொள்கையில் எமது கட்சி உறுதியாக உள்ளது. இதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. அரசியல் இலங்கை செய்தி

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய உரை: மொட்டு கட்சி கூறுவது என்ன?

  • September 16, 2026
  • 0 Comments

“ஒற்றையாட்சியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை என்ற கொள்கையில் எமது கட்சி உறுதியாக உள்ளது. இதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. அர்ச்சுனா எம்.பியின் அனுராதபுர உரை எமது கட்சியின் கொள்கைக்கு முரணாக அமையவில்லை” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பங்கேற்றமை தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் […]

ஐரோப்பா

அகதிகளை குடியேற்றுவதற்கு எதிர்ப்பு – பிடிங்டனில் சட்டப்பூர்வமற்ற வாக்கெடுப்பு

  • September 16, 2026
  • 0 Comments

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பிடிங்டன் (Piddington) கிராமத்திற்கு அருகில் புகலிடக் கோரிக்கையாளர்களை குடியேற்றுவதை எதிர்த்து “சுதந்திரத்திற்கான  வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 312 வாக்குகள் எண்ணப்பட்டதில், 285 பேர் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்ததாக கிராமத்தின் நிர்வாகக் குழு (parish council) அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில், “ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கும், சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்கும் பிடிங்டன் மேற்கொள்ளும் […]

அரபிக் கடலில் அத்துமீறில்: பாகிஸ்தான் தூதுவரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

அரபிக் கடலில் அத்துமீறல்: பாகிஸ்தான் தூதுவரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

  • September 16, 2026
  • 0 Comments

அரபிக் கடலில் இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறைக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைக்காக” தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்ய பாகிஸ்தானின் தூதரக அதிகாரியை (Charge d’Affaires) அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இரு அணுஆயுத வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போரைத் தொடர்ந்து போர்நிறுத்தம் எட்டப்பட்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே பகிரங்கமான இராணுவப் பதற்றம் ஏற்பட்டுள்ள […]