உலகம்

கட்டார் பரிசளித்த விமானத்தில் பாதுகாப்பு குறைப்பாடுகள் உள்ளதா? திடீரென திறந்த சரிவு பாதையால் சர்ச்சை

  • September 10, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதிக்கு கட்டார் அன்பளிப்பாக வழங்கிய விமானத்தில் சில பாதுகாப்பு குறைப்பாடுகள் இருப்பதாக அல்லது மேம்படுத்தல்கள் தேவைப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ட்ரம்ப் நேற்று அந்த விமானத்தை பயன்படுத்தி டல்லாஸ் நகருக்கு புறப்பட தயாரானார். அப்போது அவசரகால சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் சரிவு பாதை  (emergency slide) திடீரென திறந்துக்கொண்டது. இதன்காரணமாக அந்த பாதை அகற்றப்பட்டதுடன், ட்ரம்பின் பயணமும் தாமதமானது. இராணுவப் பணியாளர்கள் தவறுதலாக அந்தச் சரிவுப் பாதையைச் செயல்படுத்திவிட்டதாக, இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி […]

ஐரோப்பா

சியூட்டாவை ஊடுருவிய குடியேறிகள் – உளவுத்துறையினரின் எச்சரிக்கைகள் புறக்கணிப்பு

  • September 10, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள ‘சியூட்டா’ (Ceuta) பகுதிக்குள் குடியேறிகள் ஊடுருவ உள்ள விடயம் தொடர்பில் உளவுத்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் உளவுத்துறை மொராக்கோவின் உளவுத்துறையினருக்கும் மாட்ரிட் நகரில் உள்ள அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே எச்சரித்திருந்ததாக அரச ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஆவணங்களின்படி, மொராக்கோவின் வருடாந்திர ‘அரியணை ஏறிய நாள்’ (Throne Day) கொண்டாட்டங்களைப் பயன்படுத்தி, எல்லை வேலியின் மீது ஏறியோ அல்லது அதைச் சுற்றி நீந்தியோ சியூட்டாவுக்குள் நுழைய குடியேறிகள் சமூக ஊடகங்கள் […]

உலகம்

முடிவுக்கு வரும் ஈரான் போர் – ட்ரம்ப் நாள் குறிப்பு

  • September 10, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு “உடனடியாக” முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். டல்லாஸில் நடைபெறவுள்ள குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன் நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பிறகு போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அவர்களால் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது. தேர்தலைத் தங்கள் பக்கம் திருப்ப அவர்கள் […]

ஐரோப்பா

போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள புட்டின் இணக்கம்

  • September 10, 2026
  • 0 Comments

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய ரஷ்யத் தலைவர் விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வாரத் தொடக்கத்தில் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியதாக கூறியுள்ள ட்ரம்ப், இந்த தகவலை வெளியிட்டார். டல்லாஸ் நகருக்குச் செல்லும் வகையில் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்தில் ஏறுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், அவர் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய விரும்புகிறார். அதேபோல உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர்  ஜெலன்ஸ்கியும் ஒப்பந்தம் செய்ய விரும்பினால், […]

உலகம் முக்கிய செய்திகள்

சவுதி அரேபியா மீதான தாக்குதல்கள் – பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை

  • September 9, 2026
  • 0 Comments

ஹூதி  அமைப்பினர் சவுதி அரேபியா மீது மேற்கொண் தாக்குதல்களை கண்டித்துள்ள பாகிஸ்தான், அதனை கட்டுப்படுத்துமாறு ஈரானை எச்சரித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக, ஹூதிகள்  கமிஸ் முஷைத்தில் உள்ள விமானத்தளம் மற்றும் ஏனைய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில் 73 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12 மணி நேரத்தில் யேமனின் பல்வேறு மாகாணங்களில் சவுதி போர் விமானங்கள் 54 வான்வழித் […]

ஐரோப்பா

சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – லண்டனில் வேகவரம்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

  • September 9, 2026
  • 0 Comments

“உயிர்களைக் காக்கவும், பாதுகாப்பான மற்றும் மக்கள் விரும்பும் வகையிலான தெருக்களை உருவாக்கவும்” கிரீன்விச் கவுன்சில் தனது பகுதி முழுவதும் மணிக்கு 20 மைல் வேக வரம்பை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தென்கிழக்கு லண்டனில் உள்ள இந்த உள்ளாட்சி அமைப்பு ஆண்டின் பிற்பகுதியில் இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. கிரீன்விச்சில் உள்ள 72 சதவீதமான சாலைகளில் மணிக்கு 20 மைல் வேக வரம்பு அமலில் உள்ளதாகவும், ஆகவே இந்த பொதுவான வரம்பை ஓட்டுநர்கள் இலகுவாக புரிந்துக்கொள்ள முடியும் எனவும் […]

உலகம்

03 ஆம் உலகப் போர் தொடர்பில் தெஹ்ரான் எச்சரிக்கை

  • September 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வருவதாலும், ரஷ்யா-உக்ரைன் மோதல் விரிவடைந்து வருவதாலும், உலகம் “நடைமுறையில் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில்” இருப்பதாக தெஹ்ரான் நாடாளுமன்ற உறுப்பினர் கம்ரான் கசன்ஃபாரி Kamran Ghazanfari  எச்சரித்துள்ளார். ஓமான் வளைகுடாவிலும் கார்க் தீவுக்கு அருகிலும் ஐந்து ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் அழித்த பிறகு இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இதற்கிடையே ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள்  சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தி, பிராந்திய மோதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் குறைந்தது […]

உலகம்

சிரியாவில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து – 14 பேர் பலி

  • September 9, 2026
  • 0 Comments

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சர்மடா நகருக்கு அருகே, ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்ட பகுதியில் இன்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. போரின் எஞ்சிய பாகங்களைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த பணியாளர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கை செய்தி

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 9, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் பன்முகத் தொடர்புகள் போலவே இரு தரப்பினரின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான, கலாச்சார மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் […]

உலகம்

நேபாளத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க பேருதவியாக அமையும் ட்ரோன்கள்

  • September 9, 2026
  • 0 Comments

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்க்க நேபாள ராணுவம் ட்ரோன்களைப் (ஆளில்லா விமானங்களை) பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நேபாள ராணுவத்தின் ஒப்பந்த ட்ரோன் விமானி சந்தோஷ் புததோகி Santosh Budhathoki, “எங்களின் பெரும்பாலான ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. உணவு, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருளை அனுப்ப […]