ஐரோப்பா

அகதிகளை குடியேற்றுவதற்கு எதிர்ப்பு – பிடிங்டனில் சட்டப்பூர்வமற்ற வாக்கெடுப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பிடிங்டன் (Piddington) கிராமத்திற்கு அருகில் புகலிடக் கோரிக்கையாளர்களை குடியேற்றுவதை எதிர்த்து “சுதந்திரத்திற்கான  வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 312 வாக்குகள் எண்ணப்பட்டதில், 285 பேர் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்ததாக கிராமத்தின் நிர்வாகக் குழு (parish council) அறிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில், “ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கும், சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்கும் பிடிங்டன் மேற்கொள்ளும் முயற்சியை நான் ஆதரிக்கிறேன்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

“உள்ளூர் மக்களுடன் கலந்தாலோசிக்காமலேயே” அரசாங்கம் இத்திட்டத்தை முன்மொழிந்ததாக ஆக்ஸ்போர்ட்ஷயர் கவுண்டி கவுன்சிலின் தலைவர் டிம் பீடர்டர் Tim Bearder, தெரிவித்தார்.

இதேவேளை பிரித்தானியா முழுவதும், ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் தஞ்சம் கோருபவர்களைத் தங்க வைப்பதற்கு எதிராக நகரங்களிலும் கிராமங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்