இலங்கை செய்தி

அமெரிக்கச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தினால் விசா இரத்து

  • April 15, 2026
  • 0 Comments

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வருகை தந்து, அந்த நாட்டு குடிமக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்கக் குடிமக்களின் வரிப்பணத்திலிருந்து நிதியளிக்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது அவற்றைச் சார்ந்திருக்கும் நபர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விசா (Non-immigrant visa) வைத்திருப்பவர்களின் விசாக்கள் உடனடியாக இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசா இரத்து செய்யப்படுவதுடன், அத்தகைய நபர்கள் எதிர்காலத்தில் அமெரிக்க […]

இலங்கை

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • April 13, 2026
  • 0 Comments

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏதேனும் நுகர்வோர் சந்தையில் அநீதி அல்லது பிரச்சினைகளை எதிர்கொண்டால், அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் தகவல்களை வழங்க முடியும் என அந்த அதிகார சபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார பணிப்பாளர் […]

செய்தி

இலங்கைக்கு கைகொடுக்கும் சீனா!

  • April 5, 2026
  • 0 Comments

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாளை (06) விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக இலங்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் வகை மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நாட்டை வந்தடையும் திகதி ஆகியன தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

  • March 29, 2026
  • 0 Comments

இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசரகால அதிகாரங்கள் எக்காரணம் கொண்டும் பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறும் வகையில் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி […]

இலங்கை

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சஜித்!

  • March 29, 2026
  • 0 Comments

இலங்கைக்கு அவசரகால எரிபொருள் உதவியை வழங்கிய இந்தியாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அவசரகால எரிபொருள் உதவிகளை வழங்கிய இந்தியாவிற்கு நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உறவுகள் என்பவை வசதியான காலங்களில் அல்ல, மாறாக நெருக்கடியான காலங்களிலேயே சோதிக்கப்படுகின்றன என்பதை இது நினைவூட்டுகின்றது. இக்கட்டான சூழலில் எமக்குத் துணையாக நின்றவர்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

  • March 28, 2026
  • 0 Comments

ரஷ்ய கூட்டமைப்பின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடென்கோ (Andrey Rudenko) உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி அவர் நாட்டை வந்தடைவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய பிரதி அமைச்சர், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 11 ஆவது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

ஏப்ரல் 1 முதல் கொழும்பில் விசேட பாதுகாப்புத் திட்டம்

  • March 28, 2026
  • 0 Comments

இவ்வருட சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, விசேடமாக போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களின் புகையிரத நிலையங்கள் மற்றும் […]

இலங்கை

சுட்டெரிக்கும் வெயில்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கையின் பல பாகங்களில் இன்று (26) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த அதீத வெப்பம் உணரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும், தேவையற்ற கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக […]

இலங்கை செய்தி

மீண்டும் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவீடு!

  • March 22, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், நாளை (23) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை எச்சரித்துள்ளது.

இலங்கை

கொழும்பில் Parking Free!

  • March 18, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர எல்லைக்குள் நுழையும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. கொழும்பில் இனி வாகனங்களை நிறுத்துவதற்கு தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது. உலகளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!