சைபர் தாக்குதல்கள் தொடர்பில் G7 நாடுகளின் கூட்டத்தில் விவாதிக்க தீர்மானம்
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய சைபர் தாக்குதல்கள் குறித்து ஜி7 (G7) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி அறிவித்துள்ளார்.
தனது அமைச்சரவையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த விவகாரத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் என்ற தனது முன்மொழிவை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் (ஜீன்-நோயல் பாரோட்) ஏற்றுக்கொண்டதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இது குறித்து நாங்கள் விவாதிப்போம்” என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.
ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் தனது தனிப்பட்ட தரவுகளை ‘டார்க் வெப்’ (dark web) தளத்தில் வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ள தஜானி இத்தாலிய அரசாங்கம் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.




