ஐரோப்பா

குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஆணையம் புதிய முன்மொழிவு

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) , குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கிய முன்மொழிவை முன்வைத்துள்ளார்.

அதன்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருட்களைப் பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்ய முன்மொழிந்துள்ளார்.

அவரது முன்மொழிவின்படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோரின் மேற்பார்வையின் கீழ் பராமரிக்கப்படும் சிறப்பு “மினி கணக்குகள்” மூலம் மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர்  கூறியுள்ளார்.

இணையத்தில் உள்ள அதிக அடிமையாக்கும் அம்சங்கள், மோசமான உள்ளடக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் போன்ற ஆபத்துகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்த முன்மொழிவின் மீது 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் விரைவில் வாக்களிக்க உள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்