எகிப்தில் ரயில் விபத்து – நால்வர் பலி, பலர் படுகாயம்
எகிப்தில் இன்று ரயிலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 88 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அந்நாட்டின் ஜனாதிபதி அப்துல் ஃபத்தாக் அல்-சிசி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்து நிகழ்ந்த சூழல் குறித்து விசாரணை நடத்தவும், “அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்” அவர் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது “ஆழ்ந்த இரங்கலை” தெரிவித்துள்ள அதிபர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.




