ஐரோப்பா

ஈரானின் ஆதரவுடன் தாக்குதல் நடத்த வாய்ப்பு – பிரித்தானியாவை முன்னதாகவே எச்சரித்த இஸ்ரேல்

  • October 1, 2026
  • 0 Comments

ஈரானின் ஆதரவுடன் தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பிரித்தானியாவை இஸ்ரேல் முன்னதாகவே எச்சரித்ததாக   பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது  தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பிரித்தானியா இஸ்ரேலிய நிறுவனங்கள் மீது தடை விதிப்பதற்கு முன்னதாக இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவர் RAF ஃபேர்ஃபோர்ட்  (RAF Fairford) தாக்குதல் குறித்தான் தெரிவித்தாரா என்பது வெளிப்படுத்தப்படவில்லை. சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் ஏன் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறித்த கூடுதல் […]

செய்தி

மக்களின் வரிப்பணத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க தயாராகும் அமெரிக்கா

  • September 16, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு  2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வரி செலுத்துவோர் பணத்தில் நிதியளிக்கப்பட்ட இந்தத் தொகுப்பில், மேற்கத்திய ஆயுதக் கிடங்குகளில் உள்ள மிகவும் அழிவுகரமான சில ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவற்றுள் 20,000 MK-84, 20,000 BLU-117 மற்றும் 20,000 I-2000 பெனட்ரேட்டர் போர்க்குண்டுகள் அடங்கும் என்றும் வொஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  நிர்வாகம் இந்த […]

ஐரோப்பா

இஸ்ரேலிய பொருட்கள், சேவைகளுக்கு தடை விதிக்க இங்கிலாந்து தீர்மானம்

  • September 8, 2026
  • 0 Comments

இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்திற்கு தடை விதிக்க பிரித்தானியா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புதிய விதிகளை வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபான்ட் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் சர்ச்சைக்குரிய E1 குடியேற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக 1,200 வீடுகளுக்கு டெண்டர்கள் வெளியிட இஸ்ரேல் தீர்மானித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து கடுமையான விமர்சனங்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இஸ்ரேல் பதிலடி […]

ஐரோப்பா

இராணுவத்தினருக்கு அச்சுறுத்தல் – காசாவை தொடர்ந்து தாக்கும் இஸ்ரேல்

  • September 1, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல்  மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் மூ  குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். காசா நகரின் மேற்கில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் நிறைந்த பகுதியான கதிபா அருகே, இன்று இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இஸ்ரேல் குறைந்தது 12 ஏவுகணைகளை வீசியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அசாதாரணமான கடுமையான குண்டுவீச்சில், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் […]

உலகம்

காசா அமைதி திட்டம் – ஏற்க மறுக்கும் இஸ்ரேல் : அழுத்தம் கொடுக்கும் ஹமாஸ்

  • August 8, 2026
  • 0 Comments

காசா அமைதித் திட்டத்தைத் தொடரத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியதுடன், இந்த ஒப்பந்ததிற்கு இஸ்ரேலை ஒப்புக்கொள்ள வைக்க அமெரிக்கா  அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அப்பகுதியில் புதிதாக உருவாகிவரும் பாலஸ்தீனிய ஆளும் குழுவிடம் போராளிகள் ஆயுதங்களை ஒப்படைக்கும் திட்டத்தின் சமீபத்திய கட்டத்திற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக,  ட்ரம்பின் அமைதி வாரியத்திடம் ஹமாஸ் தெரிவித்தது. “இஸ்ரேலின் ஒப்புதல் கிடைத்து, இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தத் தொடங்கினால், ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இரண்டாம் கட்டத்திற்குச் செல்லத் தயாராக இருப்பதாக ஹமாஸும் மற்ற […]

உலகம்

ஈரான் ஒருபோதும் அணுவாயுதங்களை வைத்திருக்காது : இஸ்ரேல் – அமெரிக்கா உறுதிமொழி

  • July 28, 2026
  • 0 Comments

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் உறுதிமொழிந்துள்ளனர். வொஷிங்டனில் நேற்று இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட நிலையில் இந்த உறுதிமொழி எட்டப்பட்டுள்ளது. “இது மிகவும் நேர்மறையான சந்திப்பாக இருந்தது. பிரதமரும் அதிபரும் அன்றைய முக்கியப் பிரச்சினைகள், குறிப்பாக ஈரான் குறித்து, ஒரு சிறந்த மற்றும் விரிவான விவாதத்தை நடத்தினர்,” என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்காது […]

உலகம்

லெபனானின் தெற்று நகரில் இருந்து வெளியேறும் இஸ்ரேலியப் படைகள்

  • July 21, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, லெபனான் இராணுவப் படைகள் தெற்கு நகரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அப்பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் விலகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தெற்கில் உள்ள ஸவ்தார் அல்-கர்பியே நகரில் தங்கள் வீரர்கள் நிலைநிறுத்தப்படத் தொடங்கியுள்ளதாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், “பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் நகரத்திற்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக அங்கு பணியில் உள்ள இராணுவப் பிரிவுகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற […]

உலகம்

அமெரிக்கா துருக்கிக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது – இஸ்ரேல் முட்டுக்கட்டை

  • July 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா, துருக்கிக்கு (Turkey) அதிநவீன F-35 போர் விமானங்களையோ அல்லது அதற்கான ஜெட் இன்ஜின்களையோ விற்பனை செய்யக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான Fox Newsக்கு  அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் துருக்கிக்குச் சென்று அங்குள்ள நேட்டோ (NATO) மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. துருக்கிக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவது “மத்திய கிழக்கின் அதிகார சமநிலையைக் […]

உலகம்

இஸ்ரேல் மீதான சைபர் தாக்குதல்களை அதிகரித்த ஈரான்

  • June 29, 2026
  • 0 Comments

இந்த ஆண்டிலெ் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி இன்று அறிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சைபர் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலின் தேசிய சைபர் இயக்குநரகத்தின் இயக்குனர் ஜெனரல் Yossi Karadi இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் போது, ​​இஸ்ரேலின் அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டு ஜுன் மாதம்  1,600 சைபர் தாக்குதல் சம்பவங்களை பதிவு […]

Breaking News உலகம்

ஹமாஸின் இரு முக்கியஸ்தர்கள் உயிரிழப்பு – இஸ்ரேல் முழக்கம்

  • June 21, 2026
  • 0 Comments

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் இராணுவப் பிரிவுகளில் செயல்பட்ட இரு முக்கியஸ்தர்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நிலையில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பிற்கு அமைய  ஹுசைன் காத்ரா (Hussein Qadra) மற்றும் முகமது ஃபர்ரா (Mohammed ​Farra) ஆகியோரைத் தாங்கள் “ஒழித்துவிட்டதாக” இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் X பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஃபர்ராவுடன் இணைந்து இந்த வலையமைப்பை வழிநடத்திய காத்ரா, […]