சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 60 பேர் உயிரிழப்பு
சூடானில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூடானின் மேற்கு கோர்டோஃபான் Kordofan மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருக்கலாம் என உள்ளுர் சமூகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், அவசர மீட்பு நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டி, நேற்றைய தினம் (செவ்வாய்க் கிழமை) ஒருவர் உயிருடன் வெளியே வந்ததாகவும், அவர் இன்னும் சிலர் உயிருக்கு போராடுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் சம்பவம்இடம்பெற்று மூன்று தினங்கள் கடந்துள்ளபோதிலும் இன்னும் எந்தவொரு சிறப்பு மீட்புக் குழுக்களும் தலையிடவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.




