அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

கால்பந்து களத்தில் ஒரு சகாப்தம் நிறைவு: ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி

  • August 31, 2026
  • 0 Comments

அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தனக்கு வேதனையளிப்பதாக இருந்தாலும், இதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்குக் தலைவராக நின்று வழிகாட்டிய 39 வயதான மெஸ்ஸி, தனது நாட்டிற்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு மக்கள் வாக்கெடுப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குப் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சர் தோர்கெர்டூர் குன்னார்ஸ்டோட்டிர் (Thorgerdur Gunnarsdottir) தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சர்வஜன வாக்கெடுப்பு தோல்வி: பாதுகாப்பை பலப்படுத்த மாற்றுவழி தேடுகிறது ஐஸ்லாந்து

  • August 31, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு மக்கள் வாக்கெடுப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குப் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சர் தோர்கெர்டூர் குன்னார்ஸ்டோட்டிர் (Thorgerdur Gunnarsdottir) தெரிவித்துள்ளார். இதற்காக இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது ஆகிய விருப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்துவதற்கு அரசாங்கம் முன்வைத்த […]

கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு இலங்கை செய்தி

கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

  • August 31, 2026
  • 0 Comments

ஏற்றுமதியை முதன்மைப்படுத்திய 2026 ஆம் ஆண்டு தேசிய கனிமக் கொள்கையின் படி, இந்நாட்டின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், இலங்கை கனிம மணல் சங்கம் (SLMSA) மற்றும் புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கனிம வளங்களின் ஆராய்ச்சி, அகழ்வு மற்றும் பெறுமதி சேர்ப்பு செயல்முறைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்நாட்டு கனிம வளங்களை தேசிய […]

தொல்பொருள் திணைக்களத்தின் நிர்மாண பணிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை இலங்கை செய்தி

தொல்பொருள் திணைக்களத்தின் நிர்மாண பணிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

  • August 31, 2026
  • 0 Comments

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளுக்குத் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியா பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே அப்படியே இடைநிறுத்துமாறும், மேற்கொண்டு எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த இடத்தில் முன்னர் பிள்ளையார் கோயில் […]

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை செய்தி

மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு: யாழில் சோகம்

  • August 31, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அரச அலுவலகங்களுக்கு இடையே நடைபெறும் உற்பத்தித்திறன் போட்டியில் பங்கேற்பதற்காக, […]

ஈரான் நிதியை கையாளும் வங்கிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் நிதியை கையாளும் வங்கிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

  • August 31, 2026
  • 0 Comments

ஈரானிய நிதியைக் கையாளும் நிதியமைப்புகள் டொலர் அடிப்படையிலான சர்வதேச நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்படக்கூடும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) எச்சரித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுடன் நிதித் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறி, எகிப்தின் ‘பங்க் மிஸ்ர்’ (Banque Misr) வங்கியின் ஐக்கிய அரபு அமீரகக் கிளைகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா அபராதம் மற்றும் […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக 5 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் (Bench) நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

22மீதான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நாளை பரிசீலனைக்கு

  • August 31, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக 5 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் (Bench) நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமயிலான இந்த நீதியரசர்கள் குழாமில், நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கீஹான் குலதுங்க ஆகியோர் அடங்குகின்றனர். இந்த மனுக்கள் அனைத்தும் நாளை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் […]

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

  • August 31, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்கமைய வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தராததன் காரணமாக கடந்த சனிக்கிழமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு […]

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

விஜித ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவா தொடரில் பங்கேற்பு

  • August 31, 2026
  • 0 Comments

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிஇலங்கை குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். கொழும்பிலிருந்து செல்லும் தொழில்நுட்பக் குழு மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பணியகத்துடன் இணைந்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முந்தைய ஐ.நா. தீர்மானங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் […]

இந்தியா, உத்தர பிரதேச கிரேட்டர் நொய்டாவில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா செய்தி

ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு: இருவர் கைது

  • August 31, 2026
  • 0 Comments

இந்தியா, உத்தர பிரதேச கிரேட்டர் நொய்டாவில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ‘விஸ்வநாத் டிராவல்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர்கள் என அந்நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2012 டிசம்பரில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் இச்சம்பவம், ஆகஸ்ட் 4 அன்று அச்சிறுமி நொய்டா செக்டர் 63-க்கு செல்வதற்காகப் பயணிகள் […]