இந்தியா செய்தி

நக்சலிசம் முடிவுக்கு வந்த பின்னர் முதல் தீபாவளி: பிரதமர் மோடி

இந்தியாவில் நக்சலிசம் முடிவுக்கு வந்த பின்னர் கொண்டாடப்படும் முதலாவது தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

இந்தியாவில் நக்சலிசம் முடிவுக்கு வந்த பின்னர் கொண்டாடப்படும் முதலாவது தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

நக்சலிசத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரைச் சந்தித்த பிரதமர், நாட்டின் பாதுகாப்புக்காக அவர்கள் ஆற்றிய தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், பல தசாப்தங்களாக நீடித்த நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், “நக்சலிசம் இல்லாத இந்தியாவில் கொண்டாடப்படும் முதலாவது தீபாவளி இது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நக்சலிச அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கோடிக்கணக்கான மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினரின் தியாகங்களும் அர்ப்பணிப்புமே இந்த மாற்றத்திற்குப் பிரதான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் கொண்டாடுவதை மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஒருகாலத்தில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியின் முக்கிய மையமாக விளங்கிய பஸ்தார் பகுதியில் தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி