சீனாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு: அமைச்சரவை ஒப்புதல்
குடியேற்ற ஒழுங்குமுறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கையும் சீனாவும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கும், சீனாவின் தேசிய குடியேற்ற நிர்வாகத்திற்கும் இடையில் இந்த உடன்பாடு, கையெழுத்திடப்படும். வணிகம், முதலீடு, சுற்றுலா, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் குடிமக்களின் பயணத்தை இலகுபடுத்துவது உட்பட, நுழைவிசைவுகள், குடியேற்றம் மற்றும் குடியகல்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அதிகாரபூர்வ […]













