உலகம்

ICC நீதிமன்றத்தை கலைக்க ட்ரம்ப் போராடுவது நெதன்யாகுவை காப்பதற்காகவா?

  • July 31, 2026
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கலைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை, தன்னைக் காப்பதற்காக அல்ல, மாறாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிறரை வழக்கு விசாரணையிலிருந்து பாதுகாப்பதற்காகவே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று  தெரிவித்தார். இந்த அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து ஐந்து உறுப்புநாடுகள் அதில் இருந்து விலகுவது தொடர்பில்  அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரூபியோ, மிகப்பெரிய […]

உலகம்

அணுவாயுத உற்பத்தியை அதிகரிக்கும் வடகொரியா – அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எச்சரிக்கை

  • July 31, 2026
  • 0 Comments

வடகொரியாவின் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் பிற நாடுகளில் பணியமர்த்தப்படுவதற்கு எதிராக அமெரிக்காவும் 10 ஆசிய மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளன. வடகொரிய அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்காக இந்த முறையை கையாள்வதாகவும், இதன்மூலம் பெறப்படும் வருவாய் நாட்டின் அணுவாயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அந்நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில், வட கொரியாவின் சட்டவிரோத அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக” அந்நாடு திறமையான தொழிலாளர்களைப் போலி அடையாளங்களின் […]

ஐரோப்பா

பின்லாந்தில் முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவு

  • July 31, 2026
  • 0 Comments

பின்லாந்தில் முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பன்றிகளிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உணவு சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். மனிதர்களுக்கு பாதிப்பில்லாத இந்த நோய், பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகளிடம் கிட்டத்தட்ட 100 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளன. விரோலாஹ்டி  (Virolahti) மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளைச் சுற்றி ஒரு தொற்று மண்டலத்தை அந்த அமைப்பு வரையறுத்துள்ளது.    

ஐரோப்பா

பிரித்தானியாவில் சீன தூதரகத்தை நிர்மாணிக்க நீதிமன்றம் ஒப்புதல்

  • July 31, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சீனா மிகப் பெரிய தூதரகத்தை கட்டுவதற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் சட்டப்பூர்வமானது என  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு நூற்றாண்டுகள் பழமையான ராயல் மின்ட் கோர்ட்  (Royal Mint Court ) இருந்த இடத்தில் இந்த தூதகரத்தை நிர்மாணிக்க சீனா தாயாராகி வருகின்ற நிலையில், அங்கு வசிக்கும் அல்லது வணிகங்களை மேற்கொண்டு வரும் உள்ளுர்வாசிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது  ராயல் மின்ட் கோர்ட் குடியிருப்போர் சங்கம் […]

அமெரிக்க தாக்குதலில் ஈரான் நிலைகுலைந்துவிட்டது: ட்ரம்ப் உலகம் செய்தி

“அமெரிக்க தாக்குதலில் ஈரான் நிலைகுலைந்துவிட்டது” – ட்ரம்ப் கர்ஜனை

  • July 31, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போர் மிகவும் சாதகமாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் ஈரானை கடுமையாக வீழ்த்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் தொடர் வெற்றிகள் ஈரானை நிலைகுலையச் செய்துள்ளதாகவும், இறுதியில் அவர்கள் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈரான் தனது படைகளைத் திரும்பப் பெறும் வரை அமெரிக்கா தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்று […]

உலகம்

அல்ஜீரியாவில் கோர விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து – 25 பேர் உயிரிழப்பு

  • July 31, 2026
  • 0 Comments

அல்ஜீரியாவின் பூமெர்டெஸ் (Boumerdès) மாகாணத்தில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில், 25 பேர் உயிரிழந்துள்ளதாக  குடிமைப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. அதேநேரம்  44 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள்  அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்ற நிலையில், சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அறிவியல் & தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் காணப்படும் தேன்கூடு போன்ற வடிவம் – உயிரினங்கள் தோன்றுவதற்கான சான்றா?

  • July 31, 2026
  • 0 Comments

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், குறிப்பாக ‘வாலே கிராண்டே’ (‘Valle Grande’.)  எனப்படும் பள்ளத்தாக்கில், முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான தேன்கூடு போன்ற வடிவங்களை கண்டுப்பிடித்துள்ளது. இதேபோன்ற பலகோண வடிவங்கள் இதற்கு முன்பும் இனங் காணப்பட்டிருந்தாலும், ஒரே இடத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இவை காணப்படுவது இதுவே முதல் முறையாகும். இது, அவற்றின் உருவாக்கம் குறித்து ஆய்வு செய்ய விஞ்ஞானிகளைத் தூண்டியுள்ளது. 1.3 முதல் 3 அங்குல விட்டம் கொண்ட இந்தப் பலகோணங்களுக்கு மிராஃப்ளோரஸ் (Miraflores) […]

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய அமைதி ஒப்பந்த வரைவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் காயா காலாஸ் வரவேற்றுள்ளார். ஐரோப்பா செய்தி

காசா அமைதி ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

  • July 31, 2026
  • 0 Comments

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய அமைதி ஒப்பந்த வரைவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் காயா காலாஸ் வரவேற்றுள்ளார். இந்தத் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால், இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, ஹமாஸ் அமைப்பு இந்த ஒப்பந்தத்தின் விதிகளுக்குக் கட்டுப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவது ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த அமைதி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இஸ்ரேலியப் […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகோடிக்கு சிறை தண்டனை

  • July 31, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க 95 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகின் ஓட்டுனருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஓமர் ஹெய்தாரி (Omar Heidari) என்ற நபருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீது அதிக எண்ணிக்கையிலான உயிர்களுக்கு  ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த வழக்குடன் சேர்த்து  புதிய சட்டத்தின் கீழ் இதுவரை 10 […]

உலகம்

சீனா வடிவமைக்கும் நகல் AI தொழில்நுட்பம் – அமெரிக்காவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

  • July 31, 2026
  • 0 Comments

மேற்கத்தேய நாடுகளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா தனது சொந்த உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன இராணுவ ஆராய்ச்சியாளர்கள், OpenAI மற்றும் Anthropic போன்ற புகழ்பெற்ற தளங்களை பயன்படுத்தி நகல்களை உருவாக்கி வருகின்றனர். ‘மாதிரி வடிகட்டுதல்’ (model distillation) என்று அழைக்கப்படும் இந்த முறையானது, அதிக செயல்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இதனால் வொஷிங்டனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளை […]