குடியேற்றம், இனம் மற்றும் கல்வி தொடர்பாக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க ட்ரம்ப் முட்டுக்கட்டை
குடியேற்றம், இனம் மற்றும் கல்வி தொடர்பான செலவினங்களுக்காக அமெரிக்க நாடாளுமன்றம் (Congress) ஒப்புதல் அளித்திருந்த 800 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை ஒருதலைப் பட்சமாக ஒதுக்கி வைக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில், இது ஒரு புதிய கட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளது. இது தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்கக் குடிமக்களுக்குப் பயனளிக்காத, வீணான மற்றும் தீங்கு விளைவிக்கும் […]












