இலங்கையில் மிகப்பெரிய மனித புதைகுழியாக மாறிய செம்மணி
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது புதிதாக 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான மனித எச்சங்கள் கண்டறியப்பட்ட, நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி புதைகுழி இன்று பதிவாகியுள்ளது. இன்றைய அகழ்வாய்வின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட […]













