கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசியை Hashim Thaci போர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் இன்று இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1990-களில் செர்பியாவிலிருந்து கொசோவோ வன்முறையாகப் பிரிந்தபோது, அல்பேனிய இனத்தைச் சேர்ந்த கொசோவோ விடுதலைப் படையின் (KLA) உயர்மட்டத் தளபதியாக இருந்த தாசி (58), கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் காவலில் வைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.




