உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று (22) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இலங்கை செய்தி

ஒட்டு மொத்த உலகையும் உலுக்கிய சம்பவத்தின் வழக்கு தீர்ப்பு இன்று

  • September 22, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று (22) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம்; மட்டக்களப்பு சியோன் தேவாலயம்; தி கிங்ஸ்பரி விடுதி; ஷங்ரி-லா விடுதி ; சினமன் கிராண்ட் விடுதி ; மற்றும் தெஹிவளை ட்ரொபிகல் விடுதி உள்ளிட்ட இடங்களில் நடந்த எட்டு குண்டுத் […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார். இலங்கை செய்தி

22 இற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு இன்று அறிவிப்பு

  • September 22, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார். செப்டம்பர் மாதத்திற்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சபாநாயகர் அறிவிப்பு வேளையின் போது இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதைச் சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது […]

UEFA நேஷன்ஸ் லீக்' (UEFA Nations League) போட்டிகளுக்கான இங்கிலாந்து கால்பந்து அணியிலிருந்து டினோ லிவ்ராமென்டோ Tino Livramento , கொபி மைனூ Kobbie Mainoo, கோல் பால்மர் Cole Palmer, மார்கஸ் ரஷ்போர்ட் Marcus Rashford மற்றும் டெக்லான் ரைஸ் Declan Rice ஆகிய ஐந்து முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர். செய்தி விளையாட்டு

UEFA Nations League : இங்கிலாந்து அணியிலிருந்து 5 முக்கிய வீரர்கள் விலகல்

  • September 21, 2026
  • 0 Comments

UEFA நேஷன்ஸ் லீக்’ (UEFA Nations League) போட்டிகளுக்கான இங்கிலாந்து கால்பந்து அணியிலிருந்து டினோ லிவ்ராமென்டோ Tino Livramento , கொபி மைனூ Kobbie Mainoo, கோல் பால்மர் Cole Palmer, மார்கஸ் ரஷ்போர்ட் Marcus Rashford மற்றும் டெக்லான் ரைஸ் Declan Rice ஆகிய ஐந்து முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர். இதனையடுத்து Nottingham Forest அணியின் மத்தியகள வீரர் மோர்கன் கிப்ஸ்-ஒயிட் (Morgan Gibbs-White) மற்றும் எவர்டன் அணியின் ஜேம்ஸ் கார்னர் (James Garner) ஆகியோரை […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நாளை (22) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். இலங்கை செய்தி

நாளை நாடாளுமன்றம் வருகிறது ‘அனோஜன் விவகாரம்’

  • September 21, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நாளை (22) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். சவூதி அரேபியாவில் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ள அனோஜனின் விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதேவேளை, அனோஜன் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் நாளை, சபையில் கேள்வி எழுப்புவார் […]

போலி கோவிட்-19 (COVID-19) தடுப்பூசி சான்றிதழைப் பெற்றதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்து அணியின் தலைவரான கிரானிட் ஷாக்கா (Granit Xhaka) சர்வதேச பயிற்சி முகாமில் பங்கேற்பதிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் கால்பந்து சங்கம் (SFV) அறிவித்துள்ளது. செய்தி விளையாட்டு

போலி கொவிட் – 19 தடுப்பூசி: சர்ச்சையில் சிக்கிய சுவிஸ் அணி தலைவர்

  • September 21, 2026
  • 0 Comments

போலி கோவிட்-19 (COVID-19) தடுப்பூசி சான்றிதழைப் பெற்றதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்து அணியின் தலைவரான கிரானிட் ஷாக்கா (Granit Xhaka) சர்வதேச பயிற்சி முகாமில் பங்கேற்பதிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் கால்பந்து சங்கம் (SFV) அறிவித்துள்ளது. தனது தவறை ஒப்புக்கொண்டு ஷாக்கா பகிரங்க அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரும் சுவிஸ் கால்பந்து சங்கத் தலைமையும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. இது குறித்துச் சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஷாக்கா, “அச்சமயத்தில் நிலவிய மன உளைச்சல் […]

இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலை குறித்து அவரின் பொற்றோருக்கு அநுர வழங்கிய உறுதிமொழி

  • September 21, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த அவரின் பெற்றோர், உடனடியாகத் தலையிட்டு தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை கவனமுடன் செவிமடித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் இயன்ற முயற்சிகளை […]

ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆளும் 'யுனைடெட் ரஷ்யா' (United Russia) கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி

உக்ரைன்மீதான போருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு: தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் புடின்

  • September 21, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆளும் ‘யுனைடெட் ரஷ்யா’ (United Russia) கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். ரஷ்யாவில் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என அழைக்கப்படும் உக்ரைன் போருக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆதரவிற்கான சான்றாக இத்தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி புடின் சித்தரித்துள்ளார். ஜனாதிபதி புடின் மற்றும் க்ரெம்ளின் நிர்வாகத்தின் உக்ரைன் போருக்கு […]

ஜெர்மனியில் நடைபெற்ற பிராந்தியத் தேர்தலில் ஆளும் பழமைவாதக் கட்சி (CDU) வரலாற்றுப் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டின் சான்சலர் பிரீட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வருகிறார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஜெர்மனியில் ஆளுங்கட்சிக்கு விழுந்தது “அரசியல் பேரிடி”

  • September 21, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் நடைபெற்ற பிராந்தியத் தேர்தலில் ஆளும் பழமைவாதக் கட்சி (CDU) வரலாற்றுப் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டின் சான்சலர் பிரீட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வருகிறார். அவரது விரும்பத்தகாத பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்துக் கூட்டணிக் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் வெடித்துள்ளன. வடகிழக்கு மாநிலமான மெக்லன்பர்க்-மேற்கு பொமரேனியாவில் (Mecklenburg-Western Pomerania) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சி அடைந்த தோல்வியை “பேரழிவு” என மெர்ஸ் விவரித்துள்ளார். அம்மாநில வரலாற்றிலேயே முதன்முறையாக மெர்ஸின் கட்சி, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான […]

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், அவரது உயிரைப் பாதுகாக்குமாறு கோரி கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு இன்று சென்று மனு ஒன்றை கையளித்துள்ளனர். இலங்கை செய்தி

மகனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவூதி தூதரகத்திடம் மனு கையளித்த அனோஜனின் தாய்

  • September 21, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், அவரது உயிரைப் பாதுகாக்குமாறு கோரி கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு இன்று சென்று மனு ஒன்றை கையளித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை – நற்பிட்டிமுனையில் இருந்து வருகை தந்த அனோஜனின் குடும்பத்தினருடன், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். தூதரக அதிகாரிகளிடம் அனோஜனின் தாயாரும் […]

களுத்துறை சென்று சிங்கம், புலி கதை சொன்ன அர்ச்சுனா: உற்சாக வரவேற்பு அரசியல் இலங்கை செய்தி

களுத்துறை சென்று சிங்கம்,புலி கதை சொன்ன அர்ச்சுனா: உற்சாக வரவேற்பு

  • September 21, 2026
  • 0 Comments

“சிங்கமும் புலியும் ஒருபோதும் மோதிக்கொள்ளாது. ஆனால், இந்தக் கோட்பாடு நரிகளுக்குப் பொருந்தாது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்தார். மேலும், “சிங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நரிகள் ஓடுவதற்கு இடமிருக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று தனது 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு அவரது இல்லத்தில் விசேட கொண்டாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி […]