இலங்கை

கோப்பாய் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!

  • October 25, 2025
  • 0 Comments

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தியில் இன்று  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்து, ஹையேஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் இருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.    

இலங்கை

மட்டக்களப்பு-பொலன்னறுவை வீதியில் விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் வைத்தியசாலையில்!

  • October 24, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதியில் வாழைச்சேனையில் உள்ள வாகனேரி பகுதியில் வேன் ஒன்று டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று இடம்பெற்ற நிலையில் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டுபேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும், காயமடைந்த பயணிகளில் ஒருவரான வெலிகந்தையைச் சேர்ந்த 74 வயதுடையவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய டிப்பர் லாரியின் சாரதியும் காயமடைந்து தற்போது […]

உலகம்

ரஷ்யாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலி -புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் உரால்ஸில் (Urals) உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில்  12 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். கஜகஸ்தானின் (Kazakhstan) எல்லையை ஒட்டிய செல்யாபின்ஸ்க் (Chelyabinsk) பிராந்தியத்தின் கோபிஸ்க் (Kopeisk) மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தொழிற்சாலையில் இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணத்தை ஆளுநர் வெளியிடவில்லை. இருப்பினும் ட்ரோன் தாக்குதலால் வெடி விபத்து ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும்  சம்பவத்தில் […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து – நாற்பதிற்கும் மேற்பட்டோர் பலி!

  • October 13, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் மலைப்பகுதியில் பேருந்து ஒன்று குடைசாய்ந்து  விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பிரிட்டோரியாவிலிருந்து  (Pretoria)வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் (248 மைல்) தொலைவில் உள்ள லூயிஸ் டிரிச்சார்ட் (Louis Trichardt) நகருக்கு அருகில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து வருவதாகவும் சாலைப் போக்குவரத்து மேலாண்மைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சைமன் ஸ்வானே தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தில் ஜிம்பாப்வே (Zimbabwe) மற்றும் மலாவி (Malawi) நாட்டினர் பயணம் […]

error: Content is protected !!