உலகம்

ரஷ்யாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலி -புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் உரால்ஸில் (Urals) உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில்  12 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். கஜகஸ்தானின் (Kazakhstan) எல்லையை ஒட்டிய செல்யாபின்ஸ்க் (Chelyabinsk) பிராந்தியத்தின் கோபிஸ்க் (Kopeisk) மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தொழிற்சாலையில் இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணத்தை ஆளுநர் வெளியிடவில்லை. இருப்பினும் ட்ரோன் தாக்குதலால் வெடி விபத்து ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும்  சம்பவத்தில் […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த மூவர் லண்டனில் கைது!

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்ய உளவுத்துறை சேவைகளுக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் மூன்று பேர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ காவல் துறை தெரிவித்துள்ளது. 48, 45 மற்றும் 44 வயதுடைய ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறையின் தலைவர் கமாண்டர் டொமினிக் மர்பி (Dominic Murphy) “வெளிநாட்டு உளவுத்துறை சேவைகளால் ‘பிரதிநிதிகள்’ என்று […]

ஐரோப்பா

அமெரிக்காவையும், ரஷ்யாவையும் இணைக்கும் சுரங்கப்பாதையை நிர்மாணிக்க நடவடிக்கை!

  • October 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவையும் ரஷ்யாவையும் இணைக்கும் ஒரு சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. 06 மாதங்களுக்கு முன்பே இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக ரஷ்யாவின் முதலீட்டு தூதர் கூறியுள்ளார். இந்த  ரயில் சுரங்கப்பாதை பெரிங் ஜலசந்தியின் கீழ் இரு நாடுகளையும் இணைக்கக்கூடும் என்று கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev) தெரிவித்துள்ளார். இது ரஷ்யாவின் (Russia) பரந்த மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட சுகோட்கா பகுதியை அலாஸ்காவிலிருந்து (Alaska) பிரிக்கிறது. இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் […]

இந்தியா

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ட்ரம்புடன் பேசினாரா மோடி?

  • October 16, 2025
  • 0 Comments

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய பிரதமர் தனக்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நேற்று (15) தொலைபேசி உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே நேற்று உரையாடல் அல்லது தொலைபேசி அழைப்பு நடந்ததா என்பது […]

ஐரோப்பா

ரஷ்யா ஊடான எல்லை பகுதியை மூடிய எஸ்தோனியா!

  • October 12, 2025
  • 0 Comments

ரஷ்ய பிரதேசத்தின் ஒரு பகுதியாக செல்லும் வழியை நேற்று எஸ்தோனியா திடீரென மூடியுள்ளது. குறித்த பாதையில் ரஷ்யாவின் துருப்புக்கள் இருப்பதாக கிடைகப்பெற்ற தகவல்களுக்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எஸ்தோனியாவின் இந்த நடவடிக்கையை காவல்துறை மற்றும் எல்லைக் காவல் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பின் எல்லைக்குள் வழக்கத்தை விட பெரிய அளவிலான ஒரு பிரிவு நகர்வதை எல்லைக் காவலர்கள் கவனித்ததை அடுத்து” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாரியம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.  எஸ்தோனியாவில் மக்களின் பாதுகாப்பை […]

error: Content is protected !!