ஐரோப்பா

உக்ரைனின் 03 சரக்கு கப்பல்கள் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனுக்கான ராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற மூன்று சரக்குக் கப்பல்கள் மற்றும் உக்ரைனின் பாதுகாப்புத் தொழில்துறைக்கு மின்சாரம் வழங்கிய இரண்டு மின் துணை நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருங்கடல் பகுதியில் உள்ள ஒடெசா துறைமுகத்திற்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களைக் கொண்டு வந்த கொள்கலன் கப்பல் ஒன்றின் மீதும்,   தென்மேற்கு உக்ரைன் பகுதியில் உள்ள சோனோமோர்ஸ்க் துறைமுகத்தில் இருந்த மற்றொரு கப்பலின் மீதும்  தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம் ஒடெசாவிற்கு தென்மேற்கே தாக்கப்பட்ட மூன்றாவது சரக்குக் கப்பல், உக்ரைன் ஆயுதப் படைகளுக்கான ஆயுதங்களையும் ராணுவ உபகரணங்களையும் ஏற்றிச் சென்றதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறியினும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் உக்ரைன் தரப்பில் இருந்து எவ்வித கருத்தும் வெளியாவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்