ஐரோப்பா

ஜெர்மனியின் மின்மாற்றி துணை மின்நிலையத்தில் தீவிபத்து

  • September 7, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் மின்மாற்றி துணை மின்நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை இன்று அறிவித்துள்ளது. அத்துடன் மற்றொரு மின்மாற்றி துணை மின்நிலையத்தின் பாதுகாப்பு வேலி வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை மிகப் பெரிய அளவில் மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்படி மின்மாற்றியில் இடம்பெற்ற தீவிபத்து தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்ட செயலா என்பது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

ஜெர்மனியில் சாக்சோனி மாநிலத்தில் 21 வெடிகுண்டுகள் கண்டுப்பிடிப்பு

  • September 7, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் சாக்சோனி மாநிலத்தில் 21 வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர்கள் இன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கமைய கிழக்கு ஜெர்மனியின் கோர்லிட்ஸ் Goerlitz மாவட்டத்தில் உள்ள கிராஸ்டீன் Graustein துணை மின் நிலையத்திற்கு தெற்கே உள்ள உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகே, கையால் செய்யப்பட்ட 09 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான […]

ஐரோப்பா

இஸ்ரேலின் பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதனை செய்தது ஜேர்மனி

  • September 2, 2026
  • 0 Comments

ஜெர்மனி  வட அட்லாண்டிக் பெருங்கடலில் இஸ்ரேலிய பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்ததாக இராணுவ அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட லோரா ஏவுகணையே இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்,  நீண்ட தூரம் செல்லும் ஆயுதங்களை வாங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் தீவிரமாக முயன்று வரும் நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியிடம் தற்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள் இல்லை. அவை அதன் ஆயுதக் கிடங்கில் உள்ள குரூஸ் ஏவுகணைகளை […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சார வரித் திட்டத்திற்கு ஜெர்மனி எதிர்ப்பு

  • August 17, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சார வரித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜேர்மனி, இந்த திட்டம்  தேசிய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளது. அதிகரித்த மின்சார விலைகளுக்கு மத்தியில், பிரஸ்ஸல்ஸ் தனது தொழில், போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறைகளை மின்மயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய வரி நடவடிக்கைகளுக்குப் பாரம்பரியமாகத் தேவைப்படும் ஒருமித்த கருத்துக்குப் பதிலாக, தகுதிவாய்ந்த பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு சட்டக் கருவி மூலம் இந்த திட்டத்தை அமுல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முயல்கிறது என்று […]

ஐரோப்பா

ஜெர்மனியில் காட்டுத்தீ அச்சுறுத்தல் – ஆவணங்களுடன் வெளியேறுமாறு உத்தரவு

  • August 14, 2026
  • 0 Comments

ஜெர்மனி – பெல்ஜியம் எல்லையருகே காட்டுத்தீ பரவி வருகின்ற நிலையில், இன்று அதிகாலை 1800 பேரை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுமாறு நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. “கெய்” Gey கிராமத்தை விட்டு குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறி, அருகிலுள்ள ஸ்ட்ராஸ் Strass  கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்குச் செல்ல வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான மருந்துகளை மட்டும் எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பெல்ஜியம் […]

ஐரோப்பா

வெடிபொருட்களுடன் ஊடுருவும் ஆளில்லா விமானங்கள் – ஜேர்மனி எடுத்த தீர்மானம்

  • August 10, 2026
  • 0 Comments

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையம் ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஜெர்மனி தனது ஆளில்லா விமான எதிர்ப்பு காவல் பிரிவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்தது. இராணுவ உபகரணப் போக்குவரத்திற்கான முக்கிய மையமான லீப்ஜிக்-ஹாலே விமான நிலையத்தில், உக்ரேனிய சரக்கு விமானம் ஒன்றின் அருகே வெடிபொருட்கள் நிரப்பட்ட ஆளில்லா விமானம் கண்டறியப்பட்டது. பின்னர் குறித்த விமானம் செயலிழக்கப்பட்டது. இந்த சம்பவம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஜெர்மனியில் வெப்பத்தினால் 9,800 பேர் உயிரிழப்பு – மீண்டும் தாக்கும் வெப்ப அலை

  • July 30, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் RKI சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வெப்பநிலையானது சுமார் 20 டிகிரி செல்சியஸை விட அதிகரித்ததே மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே , வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் எல்லையைத் தாண்டக்கூடும் என்பதால், […]

ஐரோப்பா செய்தி

ஜேர்மனியில் மருத்துவ விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – விதிகளை கட்டாயமாக்க பரிசீலனை

  • July 27, 2026
  • 0 Comments

மருத்துவ விடுப்புச் சான்றிதழ் (sick leave) விதிகளைக் கடுமையாக்கும் திட்டங்களை ஜேர்மனி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள தொழிலாளர்கள் 2024-ஆம் ஆண்டில் சராசரியாக சுமார் 22 நாட்கள் மருத்துவ விடுப்பாக  எடுத்துள்ளனர். இது சர்வதேச அளவில் மிக உயர்ந்த அளவுகளில் ஒன்றாகும். மின்னணு மருத்துவ விடுப்புச் சான்றிதழ் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் இந்நிலை கவலைக்குரிய ஒன்றாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பாரேட் நிகழ்வில் தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

  • July 27, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் பாரேட் நிகழ்வின்போது மக்கள் மீது வேன் ஒன்றை மோதி தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல்தாரியான 21 வயதுடைய இளைஞர்   இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பை பேணியதாக தெரியவந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்படி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் தாக்குதல் நடத்தியவர் பயன்படுத்திய கூர்மையான ஆயுதத்தால் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல்தாரியை கைது செய்ய முயன்றபோது அவர் கூர்மையான ஆயுதத்துடன் பொலிஸாரை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இடம்பெற்ற தாக்குதல் – தாக்குதல்தாரிக்கு ISIS அமைப்புடன் தொடர்பு

  • July 26, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் பெர்லின் நகரில்  LGBTQ+ நிகழ்விற்காகக் கூடியிருந்த மக்கள் மீது வேன் ஒன்று புகுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த நிகழ்வு ஆரம்பமான சிலமணி நேரங்களிலேயே இடைநிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தாக்குதல்தாரி தொடர்பான மேலதிக விவரங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பெர்லின் […]