ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் – பின்தங்கியிருக்கும் பிரித்தானியா
ரஷ்யாவிடமிருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட பிரித்தானியா பின்தங்கியிருப்பதாக விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் Air Chief Marshal Sir Richard Knighton எச்சரித்துள்ளார்.
தற்போதைய பாதுகாப்புச் சூழலை மிகவும் ஆபத்தான காலகட்டம்” என்று அவர் விவரித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவின் நாசவேலைகள், இணையவழித் தாக்குதல்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உள்நாட்டில் உணவு மற்றும் தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கான அரசாங்க வழிகாட்டுதலைத் தாம் பின்பற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்களின் தயார்நிலையையும் பாதுகாப்புச் செலவினங்களையும் அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்கால ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஐரோப்பிய நாடுகள் தங்களின் கூட்டுப் பாதுகாப்பிற்கான அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




