உலகம் செய்தி

ஈரான் பாதுகாப்புப் படையில் குழந்தைகள் ஈடுபட்டதாக தகவல் – அதிர்ச்சியில் உலக நாடுகள் 

  • March 31, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் 11 வயது சிறுவன்  வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம், ஈரானில் பாதுகாப்புப் படைகளில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்ற கவலையை எழுப்பியுள்ளது. அலிரேசா ஜஃபாரி என்ற அந்த சிறுவன், தனது தந்தையுடன் சேர்ந்து பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் பணியில் உதவி செய்தபோது மார்ச் 11 அன்று கொல்லப்பட்டதாக அவரது தாய் தெரிவித்தார். அவர்கள், நகரத்தை பாதுகாக்க பசிஜ் தன்னார்வப் படையினருக்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) 12 வயதுக்கு […]

இலங்கை செய்தி

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

  • March 31, 2026
  • 0 Comments

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 ரயில் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தற்போது தீயணைப்புப் படையினரால் தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்தச் சம்பவத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் செய்தி

வளைகுடா நாடுகளுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குகிறது பிரிட்டன்!

  • March 31, 2026
  • 0 Comments

ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால் சவூதி அரேபியா, குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி John Healey அறிவித்துள்ளார். வளைகுடா நாடுகளுடனான பிரித்தானியாவின் உறுதியான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில், கத்தாரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானிய போர் விமானங்கள் தொடர்ந்து அங்கு இயங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மத்திய கிழக்கின் பாதுகாப்பை உறுதி செய்யத் தனது நாடு கூட்டாளிகளுடன் எப்போதும் துணை […]

உலகம் செய்தி

இறங்கிவர மறுத்தால் ஈரான்மீதான தாக்குதல் தீவிரமாகும்!

  • March 31, 2026
  • 0 Comments

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை அமெரிக்காவுடன் இணக்கமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் Hegseth வலியுறுத்தினார். சிலவேளை இணக்கம் ஏற்படவில்லை எனில், அமெரிக்க ராணுவம் தனது தாக்குதலின் தீவிரத்தை பலமடங்கு அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த முப்பது நாட்களில் ஈரானில் 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் 11,000 இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக ராணுவத் தளபதி டான் கெய்ன் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்கா பெற்றுள்ள வான்வழி […]

அரசியல் இலங்கை செய்தி

சமஷ்டி திட்டத்தை ஒருபோதும் கைவிடோம்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்!

  • March 31, 2026
  • 0 Comments

” எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் சமஷ்டிக் கொள்கையைக் கைவிடப்போவதில்லை” என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு, மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்குக் கிளையின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. […]

ஐரோப்பா செய்தி

“காத்திருக்கிறேன்” – பிரித்தானிய மன்னரின் வருகைக்கு ட்ரம்ப் ஆவல்

  • March 31, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் (Charles) மன்னரும் ராணி கமிலாவும் (Camilla) அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர்களின் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்ரூத்’ சமூக வலைதளத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இடம்பெறும் எனவும், ஏப்ரல் 28 ஆம் திகதி அன்று வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடு […]

இலங்கை செய்தி

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

  • March 31, 2026
  • 0 Comments

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மன்று உத்தரவிட்டது. 1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் மண்டைதீவு புதைகுழி விவகாரம் தீவகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான முறைப்பாட்டை, கடந்த ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி தனது மகனைப் […]

இலங்கை செய்தி

கனடாவில் ஏதிலி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படும் நிலையில் யாழ். தமிழர்

  • March 31, 2026
  • 0 Comments

இலங்கையில் உள்நாட்டுப் போர் மற்றும் இடப்பெயர்வுகளைச் சந்தித்து, 16 ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு கப்பல் மூலம் கனடா சென்றடைந்த இலங்கையரான குகதீஸ்வரன், தற்போது மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதீஸ்வரன் துரைசிங்கம்,இலங்கையின் உள்நாட்டுப் போர்ச் சூழலில் தாயை இழந்து, சிறுவயதிலேயே கல்வியைக் கைவிட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 2009 ஆம் திகதி போர் முடிவுக்கு வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட […]

இலங்கை செய்தி

25 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 12 பேருக்கு மறியல் நீடிப்பு!

  • March 31, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 25 இந்திய மீனவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, மேலும் 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சமயம், கடற்படையினரால் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அன்று முதல் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். […]

புகைப்பட தொகுப்பு

ஆழியிலே முக்குளிக்கும் அழகே 

  • March 31, 2026
  • 0 Comments

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே அதிக கிளாமருடன் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். இரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்த திவ்யபாரதிக்கு ஒருகட்டத்தில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்து […]

error: Content is protected !!