ஐரோப்பா

பிரான்ஸில் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து 04 ஓவியங்கள் திருட்டு

  • September 8, 2026
  • 0 Comments

பிரான்ஸின் ரிவியேராவில்  கேன்ஸ்-சுர்-மெர் Cagnes-sur-Mer நகரில் உள்ள ரெனோயர்  Renoir அருங்காட்சியகத்தில் இருந்து, நான்கு ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களை கைது செய்ய துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது கொள்ளையர்கள் வசம் இருந்த ஒரு ஓவியம் கீழே விழுந்ததாகவும், ஏனைய மூன்று ஓவியங்களுடன் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொள்ளையர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் தீர்மானம்

  • September 8, 2026
  • 0 Comments

இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக பிரித்தானியா தடை விதித்ததை தொடர்ந்து தற்போது பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் Jean-Noël Barrot இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேற்கு கரையில் கட்டுப்பாடற்ற விரிவாக்கம், தீவிரவாதக் குடியேற்றவாசிகளால் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோயல் பாரோட் தெரிவித்தார். இதேவேளை பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடாவுடன் சேர்ந்து மொத்தமாக […]

ஐரோப்பா

பிரான்ஸின் ஒயின் உற்பத்தி 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

  • September 7, 2026
  • 0 Comments

பிரான்சின் ஒயின் உற்பத்தி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான பிரான்ஸ், 33.9 மில்லியன் ஹெக்டோலிட்டர்களை  உற்பத்தி செய்யும் என இவ்வாண்டின் ஆரம்பத்தில் கணித்திருந்தது. இது 2025 ஆம் ஆண்டை விட 6 சதவீதம் குறைவாகவும், 2021 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில், சராசரியை விட 17 சதவீதம் குறைவாகவும் இருக்கும். ஒரு ஹெக்டோலிட்டர் என்பது 100 […]

ஐரோப்பா

சிறிய படகுகள் மூலம் இடம்பெறும் ஆட்கடத்தலை தடுக்க பிரான்ஸ் – பிரித்தானியா இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

  • September 3, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாய் ஊடாக இடம்பெறும் புலம்பெயர்தலை தடுக்க பிரித்தானிய அரசாங்கம் பிரான்ஸுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. 03 ஆண்டுகள் செயற்படுத்தப்படும் இந்த ஒப்பந்தத்திற்காக 662 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு கடற்கரைப் பகுதிகளில் சிறிய படகுகள் மூலம் இடம்பெறும் ஆட்கடத்தலை தடுப்பதே இதன் நோக்கம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்காக 45 அதிகாரிகளை கொண்ட ஒரு சிறிய பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,  இதன் மூலம், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிரெஞ்சு அதிகாரிகளின் மொத்த […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் தேசிய சேவையில் இணையும் மக்கள் – மாதத்திற்கு 800 யூரோ கொடுப்பனவு

  • September 1, 2026
  • 0 Comments

பிரான்ஸில் தேசிய சேவையில் 3000 பேர் இந்த வாரத்தில் தன்னார்வமாக இணையவுள்ளனர். இந்தத் தன்னார்வலர்கள் 10 மாத கால சேவைக்காகப் பதிவு செய்துள்ளனர். இதில் அவர்கள் ஒழுக்கம், அணிவகுப்புப் பயிற்சி, இராணுவப் பாடல்கள் மற்றும் ஆயுதங்களைக் கையாளுதல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வார்கள். இராணுவம், விமானப்படை அல்லது கடற்படையில் சேர்வதற்கு முன்பு,  ஐந்து வார அடிப்படை இராணுவப் பயிற்சியுடன் தங்கள் சேவையைத் தொடங்குவார்கள். அத்துடன் பங்கேற்பாளர்களுக்கு  தங்குமிடம், உணவு மற்றும் உடை ஆகியவை வழங்கப்படுவதோடு,   மாதத்திற்கு €800 வழங்கப்படும். இந்த […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே மோதிய கார் – 07 பேர் கவலைக்கிடம்

  • August 27, 2026
  • 0 Comments

பிரான்சின் கேன் Caen நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பாதசாரிகள் கடவையில் கார் ஒன்று வேண்டுமென்றே மக்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களின் ஏழு பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரது நோக்கம் இன்னும் தெரியவில்லை என்றும் சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் […]

ஐரோப்பா

பிரான்ஸ் பாடசாலைகளில் கைப்பேசிகளை தடை செய்யும் சட்டமூலம் – தீவிர முனைப்பில் அரசாங்கம்

  • August 24, 2026
  • 0 Comments

புதிய கல்வியாண்டு தொடங்கும் முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலைப் பாடசாலைகளிலும் கைப்பேசி தடை செய்யப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்கான சட்டத்தை இயற்ற  ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உறுதிப்பூண்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் மௌட் ப்ரேஜியன் Maud Bregeon  இன்று தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உயர்நிலைப் பாடசாலைகளில் கைபேசிகளுக்கான தடை அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட வழிமுறைகளை ஒரு நிலையான சட்டக் கட்டமைப்பிற்குள் செயல்படுத்துவதற்காக, […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு புதிய இடைமறிப்பு ஏவுகணைகள், ரஷ்யாவுக்கு அழுத்தம் – பிரான்ஸ் வலியுறுத்து

  • August 22, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு புதிய இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இன்று அறிவித்துள்ளார். ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் Kryvyi Rih ரஷ்யா தீவிர தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து மக்ரோன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 23 குழந்தைகள் உட்பட 130 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊர் மீதான இந்தத் தாக்குதல், […]

ஐரோப்பா

பிரான்ஸில் வெப்ப அலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவு

  • August 19, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த ஜுலை மாதம் நிலவிய வெப்ப அலை காரணமாக 1,243 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று இந்த தகவலை அறிவித்தது. ஜுலை 3 முதல் ஜூலை 22 வரையிலான காலகட்டத்தில், இந்த இறப்புகள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆண்டை தாக்கிய கோடைக்கால வெப்ப அலைக் காரணமாக பிரான்ஸில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – 500 பேர் கைது

  • August 16, 2026
  • 0 Comments

பிரான்ஸில் காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வேண்டுமென்றே தீ மூட்டியதாகவும், மீதமுள்ளவர்கள் தற்செயலாக அவ்வாறு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள். ஜூலை மாதம் போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை குரோஷியாவின் விடுமுறைத் தளமொன்றில் கடந்த […]