ஐரோப்பா

பிரித்தானிய கடல் பகுதிக்கு அருகில் ரஷ்யாவின் கடற்படை நடவடிக்கைகள் அதிகரிப்பு

  • August 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கடல் பகுதிக்கு அருகில் ரஷ்ய கடற்படை நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ரோயல் கடற்படை தெரிவித்துள்ளது. மொஸ்கோவின் கப்பல்களைக் கண்காணிப்பதற்காக ஜூலை மாதம் 21 நாட்கள் செலவிட்டதாகவும் கடற்படை  கூறியுள்ளது. 2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரஷ்யக் கப்பல்களைக் கண்காணிக்கும் கடற்படை நடவடிக்கைகள் ஜூலை மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. போர்க்கப்பல்கள் டோவர் ஜலசந்தி மற்றும் வடகடலில் மீண்டும் மீண்டும் பயணித்துள்ளன. “நிழல் கடற்படை” எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ரஷ்யாவின் நியூஸ்ட்ராஷிமி (Neustrashimy) மற்றும் அட்மிரல் கிரிகோரோவிச்  […]

ஐரோப்பா

04 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டுவர போப் லியோ அழைப்பு

  • August 9, 2026
  • 0 Comments

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருவதாக குறிப்பிட்ட பாாப்பரசர் போப் லியோ மோதலை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய ஆராதணையின்போது அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “துயரமான சம்பவங்கள் பெருகி வருகின்றன, இதனால் குழந்தைகள் உட்பட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று கூறினார். சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும், இரு தரப்பிலும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று […]

உலகம் முக்கிய செய்திகள்

ட்ரம்பின் 15 அம்சத் திட்டம் நிராகரிப்பு – படைகளை திரும்பப் பெற வாய்ப்பில்லை

  • August 9, 2026
  • 0 Comments

ஹமாஸ் “உண்மையாகவே” ஆயுதங்களைக் கைவிடும் வரை இராணுவப் படைகள் திரும்பப் பெறப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அத்துடன் , காசாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 15 அம்சத் திட்டத்தையும்  நிராகரித்துள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் “முழுமையான ஆயுதக் கைவிடுதலுக்கான” உடன்பாட்டை எட்டியுள்ளதாக ட்ரம்பின் அமைதி வாரியம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது. ஆனால், இஸ்ரேல் “அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும்” முடிவுக்குக் கொண்டுவந்து, காசாவிலிருந்து தனது படைகளைத் திரும்பப் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

121 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம் – ஐரோப்பிய நாடுகளில் தெரியும்

  • August 9, 2026
  • 0 Comments

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் நிகழும் என நாசா தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி, 1905-ஆம் ஆண்டிலிருந்து காணக்கிடைக்கும் இந்த சூரிய கிரகணம், ஆகஸ்ட் 12 அன்று ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் தெரியும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முழு சூரிய கிரகணத்தின் போது, ​​சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன், சூரியனை முழுமையாக மறைத்துவிடுகிறது. இதனால், பிற்பகல் வானம் மாலைப் […]

உலகம் முக்கிய செய்திகள்

H-1B விசாவில் புதிய திருத்தம் – அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படும் தொழிலாளர்கள்

  • August 9, 2026
  • 0 Comments

H-1B விசா வைத்திருக்கும் சில வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்கும்போது, ​​புதிய வேலைகளைக் கண்டறிவதற்காக வழங்கப்படும் 60 நாள் கால அவகாசத்தை நீக்குவது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த முன்மொழிவு தற்போது வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தால் (OMB) மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் முன்மொழியப்பட்ட மாற்றங்களின் இறுதி விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த புதிய முன்மொழிவு சட்டமானால், வேலையை இழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அவர்களது […]

உலகம்

டொரெண்டோவில் இந்திய வம்சாவளி இளைஞர் மரணம் – 07 மாதங்களின் பின் சந்தேகநபர் ஒருவர் கைது

  • August 9, 2026
  • 0 Comments

கனடாவின் டொராண்டோவில் உள்ள இல்லமொன்றில்  டிசம்பர் 20 ஆம் திகதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதான ஹிமான்ஷி குரானா, என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணம் தொடர்பில் அவரின் துணைவரான 32 வயதான அப்துல் கஃபூரி,  சந்தேக நபராக அறிவிக்கப்பட்டு, முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் டொராண்டோ விமான நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். டொராண்டோ காவல்துறையின் தப்பியோடியவர்களைப் பிடிக்கும் பிரிவு […]

உலகம்

ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – உடல் கருகி நால்வர் பலி

  • August 9, 2026
  • 0 Comments

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro)  நேற்று இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூவர் கொலம்பிய சுற்றுலாப் பயணிகள் என பிரேசிலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிகவும் அடர்ந்த தாவரங்களைக் கொண்ட மலைப்பகுதி காடான திஜூகா  தேசிய பூங்காவில் ( Tijuca National Park) அந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் விமானியும் மூன்று பெண்களும் “தீயில் கருகி உயிரிழந்ததாக தீயணைப்பு வீரர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், செங்குத்தான, எளிதில் சென்றடைய […]

படையினரைக் களமிறக்கி நாம் ‘அரகலய’வை ஒடுக்கவில்லை. இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே நாம் ஓரடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

இளைஞர் புரட்சியின்போது பின்வாங்கியது ஏன்? நாமல் விளக்கம்

  • August 9, 2026
  • 0 Comments

படையினரைக் களமிறக்கி நாம் ‘அரகலய’வை ஒடுக்கவில்லை. இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே நாம் ஓரடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: “அரகலய காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அக்காலப்பகுதியில் இளைஞர்கள் மீது கோட்டாபய ராஜபக்ச எவ்வித வன்முறையையும் ஏவவில்லை. இளைஞர்களின் போராட்டங்களை இந்தியா, பங்களாதேஷ் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை உடன் கைவிடுமாறு மனோ வலியுறுத்து

  • August 9, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: “தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்காக நாம் ஒன்றிணைந்து போராடினோம். ஆனால், அந்த பழைய தோழரை இன்று காண முடியவில்லை. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குச் சட்டத்தரணிகள் சங்கம் […]

உலகம்

இந்தோனேசியாவின் புரோமோ மலை தேசியப் பூங்கா காலவரையறையின்றி மூடப்படுகிறது

  • August 9, 2026
  • 0 Comments

கிழக்கு ஜாவாவில் உள்ள புரோமோ மலை தேசியப் பூங்காவை ( Bromo national park) மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவலானது எரிமலை நோக்கி விரிவடைந்ததே பூங்காவை மூடக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூடல் ஆகஸ்ட் 8 மாலை முதல் காலவரையறையின்றி  அமலுக்கு வந்துள்ளது என்று பூங்கா நிர்வாகி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பைப் பேணுவதகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி […]