காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்
காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இந்திய- இலங்கை அமைச்சரவைகளின் அங்கீகாரம் பெறப்படுவது மட்டுமே எஞ்சியுள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 65 மில்லியன் டொலர் நிதியுதவியை கொடையாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, “காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணியில் எந்தத் தடங்கலும் இல்லை. உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; கையெழுத்திடும் நிகழ்வும் இறுதி நிலையை […]



