நுவரெலியா , நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இலங்கை செய்தி

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி: நுவரெலியாவில் துயரம்

  • September 5, 2026
  • 0 Comments

நுவரெலியா , நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய பெருமாள் திவாகர் மற்றும் 23 வயது உடைய ஹப்புத்தளை பகுதியை சேர்ந்த அன்பழகன் நிக்சன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் குளிக்க சென்றபோதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். […]

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு (Kharg Island) அருகே, வளைகுடாப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் ஏவுகப்பல் (tanker) மீது அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக ஈரானின் Tasnim ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கார்க் தீவுக்கு அருகே ஈரான் எண்ணெய் கப்பல்மீது அமெரிக்கா தாக்குதல்

  • September 5, 2026
  • 0 Comments

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு (Kharg Island) அருகே, வளைகுடாப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய்  கப்பல் (tanker) மீது அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக ஈரானின் Tasnim ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கார்க் தீவின் நங்கூரமிடும் பகுதியில் இருந்த கப்பல் மீது அமெரிக்காவின் நான்கு ஏவுகணைகள் பாய்ந்து தாக்கியதாக கார்க்கில் உள்ள தஸ்னீம் நிருபர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பலில் இருந்த பணியாளர்கள் […]

" நாங்கள் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பயப்படவும் இல்லை. அதனால்தான் துணிச்சலுடன் நேரில் ஆஜராகியுள்ளோம்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

” என்பிபி அல்ல மக்களே எனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்”

  • September 5, 2026
  • 0 Comments

” நாங்கள் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பயப்படவும் இல்லை. அதனால்தான் துணிச்சலுடன் நேரில் ஆஜராகியுள்ளோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராவதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: “நான் கைது செய்யப்பட்டு உள்ளே வைக்கப்பட்டாலும் கூட, திட்டமிட்டபடி செப்டம்பர் 12 ஆம் திகதி மக்கள் கூட்டம் நிச்சயமாக […]

புதிய உலக வரைபடத்திற்கு 164 நாடுகள் ஆதரவு: அமெரிக்கா கடும் எதிர்ப்பு உலகம் செய்தி

புதிய உலக வரைபடத்திற்கு 164 நாடுகள் ஆதரவு: அமெரிக்கா கடும் எதிர்ப்பு

  • September 5, 2026
  • 0 Comments

ஆப்பிரிக்கக் கண்டத்தின் அளவைப் பெரிதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அளவைச் சிறியதாகவும் காட்டும் புதிய உலக வரைபடத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளது. ஐ.நா-வின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. கண்டங்களின் நிலப்பரப்பை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 164 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன. ‘ஈக்வல் எர்த்’ (Equal Earth) வரைபடக் […]

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் சனிக்கிழமை வசந்த காலத்தின் தொடக்கத்திலேயே கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதை அடுத்து, தீ மூட்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் எல் நினோ தாக்கம்: சிட்னியில் வெப்ப அலை

  • September 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் சனிக்கிழமை வசந்த காலத்தின் தொடக்கத்திலேயே கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதை அடுத்து, தீ மூட்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள வலிமையான ‘எல் நினோ’ (El Nino) வானிலை மாற்றமே இதற்கு முக்கியக் காரணமாகும். பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகச் சக்திவாய்ந்ததாக எதிர்பார்க்கப்படும் இந்த எல் நினோ காரணியால், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான வசந்த […]

Trump has Modi top of mind: Will visit Delhi within this year இந்தியா உலகம் செய்தி

ட்ரம்பின் மனதில் மோடிக்கு முதலிடம்: இவ்வருடத்துக்குள் டெல்லி விஜயம்

  • September 5, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே முதலிடத்தில் உள்ளார் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியவை வருமாறு , “வரும் டிசம்பரில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், டோரல் நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 35-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் […]

காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging), வரும் நவம்பர் 10-ஆம் திகதி ஹார்பர்காலின்ஸ் (HarperCollins) பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. இந்தியா செய்தி

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் நவம்பரில் வெளியீடு

  • September 5, 2026
  • 0 Comments

காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging), வரும் நவம்பர் 10-ஆம் திகதி ஹார்பர்காலின்ஸ் (HarperCollins) பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. இப்புத்தகத்தில் சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், திருமணம், ராஜீவ் காந்தி படுகொலை மற்றும் அவரது அரசியல் பிரவேசம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக, இந்நூலை வெளியிடவிருந்த “பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா” (Penguin Random House India) நிறுவனம் இதிலிருந்து பின்வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் […]

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாகப் பரவியுள்ள அடர் புகை மூட்டம் (Haze), காற்று மாசுபாட்டை அபாயகரமான நிலைக்கு உயர்த்தியதை அடுத்து , மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசிய காட்டுத்தீயால் பரவும் அடர் புகை: மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்

  • September 5, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாகப் பரவியுள்ள அடர் புகை மூட்டம் (Haze), காற்று மாசுபாட்டை அபாயகரமான நிலைக்கு உயர்த்தியதை அடுத்து , மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. “பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் காற்று மாசுபாடு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சரவாக் மாநிலத்தின் செரியான் (Serian) பிரிவு முழுவதிலும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த மன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்” எனப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் […]

இந்தியா, கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிகழ்ந்துள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

கேரளாவில் கோர விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

  • September 5, 2026
  • 0 Comments

இந்தியா, கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின் மதுரை பதிவு எண் கொண்ட காரில் 8 பேர் பயணித்துள்ளனர். அந்தக் கார் குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது அதே திசையில் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு சாலை பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த […]

நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கையில் சமையல் எரிவாயு விலை குறைப்பு

  • September 5, 2026
  • 0 Comments

நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார். இதற்கமைய 12.5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 4,365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோ கிலோ […]