வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் போராட்டத்தை இந்தியப் பொலிஸார் முடக்கியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட பலரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்தியா செய்தி

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது

  • October 3, 2026
  • 0 Comments

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் போராட்டத்தை இந்தியப் பொலிஸார் முடக்கியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட பலரை அதிரடியாகக் கைது செய்தனர். CJP மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், Gen Z இளைஞர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசிற்குச் சாதகமாக உள்ளதாகக் குற்றம் சாட்டும் போராட்டக்காரர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பணிதுறப்பு […]

இஸ்ரேல் செல்லும் விமானப் பயணத்தின்போது அபாரமான துணிச்சலை வெளிப்படுத்தி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, 'விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்' விருது வழங்கிகௌரவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். இந்தியா செய்தி

174 பேரின் உயிரைக் காத்த விமானி ஸ்மித் மச்சாருக்கு உயரிய விருது

  • October 1, 2026
  • 0 Comments

இஸ்ரேல் செல்லும் விமானப் பயணத்தின்போது அபாரமான துணிச்சலை வெளிப்படுத்தி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, ‘விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்’ விருது வழங்கிகௌரவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ” இஸ்ரேல் நோக்கிச் சென்ற ப்ளை துபாய் விமானத்தின் விமானியான ஸ்மித் மச்சாரின் துணிச்சல் இன்று உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் […]

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச் செயலர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் பாஜகவின் உயர் மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். இந்தியா இலங்கை செய்தி

பாஜக தலைவர்களுடன் ஜே.வி.பி. குழு சந்திப்பு

  • September 30, 2026
  • 0 Comments

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச் செயலர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் பாஜகவின் உயர் மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். நான்கு நாள் பயணமாக புதுடெல்லி சென்றுள்ள ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவினருக்கு பாஜக தலைமையகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி. எல். சந்தோஷ் ஜியுடன், ஜேவிபி குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடினர். அவர், பாஜகவின் வரலாறு, அமைப்பு ரீதியான பயணம் மற்றும் அதன் விரிவான அடிமட்ட […]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் 7 சடலங்கள் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு மரணங்கள் தற்கொலை காரணமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

யாழில் தற்கொலைகள் அதிகரிப்பு:ஒரே நாளில் மட்டும் 4 பேர் மரணம்

  • September 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் 7 சடலங்கள் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு மரணங்கள் தற்கொலை காரணமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாள்களில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதற்கான அவசர முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறுகிய காலப்பகுதியில் இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றமை யாழ். குடாநாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இது குறித்த சமூக […]

சீனாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு: அமைச்சரவை ஒப்புதல் இலங்கை செய்தி

சீனாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு: அமைச்சரவை ஒப்புதல்

  • September 2, 2026
  • 0 Comments

குடியேற்ற ஒழுங்குமுறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கையும் சீனாவும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கும், சீனாவின் தேசிய குடியேற்ற நிர்வாகத்திற்கும் இடையில் இந்த உடன்பாடு, கையெழுத்திடப்படும். வணிகம், முதலீடு, சுற்றுலா, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் குடிமக்களின் பயணத்தை இலகுபடுத்துவது உட்பட, நுழைவிசைவுகள், குடியேற்றம் மற்றும் குடியகல்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அதிகாரபூர்வ […]

கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று தலைமன்னாரில் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

மனைவி குத்திக் கொலை: கணவன் கைது: தலைமன்னாரில் பயங்கரம்

  • August 26, 2026
  • 0 Comments

கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று தலைமன்னாரில் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார். தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் பாடல்கள் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ இசைப் தரவரிசைப் பட்டியல்களில் (Music Charts) இடம்பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் AI பாடல்களுக்குத் தடை

  • August 25, 2026
  • 0 Comments

முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் பாடல்கள் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ இசைப் தரவரிசைப் பட்டியல்களில் (Music Charts) இடம்பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, பாடல்கள் தகுதி பெற அவை “பெரும்பாலும் மனிதர்களின் கலைப்படைப்பாக” இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய பதிவுத்துறை சங்கம் (ARIA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கலைத்துறையின் மனித இயல்பை ஊக்குவிக்கவே” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிஜே (DJ) ஜோஷ் பவாஸ் என்பவர், […]

பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை செய்தி

பாதாளகுழு தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது

  • August 18, 2026
  • 0 Comments

பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்குற்றச் செயலுக்கு உதவி புரிந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆண் ஒருவரையும் 23 வயதுடைய பெண் ஒருவரையும் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆகஸ்ட் 17 அன்று கைது செய்தனர். கைது […]

ஐரோப்பா செய்தி

புதிய ஆட்சி மலர்ந்த பின் சிரியா சென்ற முதல் ஐரோப்பிய தலைவர்

  • July 7, 2026
  • 0 Comments

சிரியாவில் ஜனாதிபதி அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் , 2024-ல் பஷர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய பிறகு, அங்கு செல்லும் முதல் ஐரோப்பிய தலைவர் என்ற பெருமையுடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமையன்று டமாஸ்கஸ் சென்றடைந்தார். 13 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் சின்னாபின்னமான சிரியாவை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில், அசாத் காலத்தில் சிரியாவைத் தனிமைப்படுத்திய மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் ஜனாதிபதி ஷாரா நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளார். […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலை கலவரம்: நடந்தது என்ன? விசாரணை தீவிரம்

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 19 கைதிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் 10 பொலிஸ் குழுக்கள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்றிரவுடன் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 700 கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், […]