உலகம்

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் : 3,412 பேர் உயிரிழப்பு!

  • May 31, 2026
  • 0 Comments

லெபனான் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,412 ஆக உயர்ந்துள்ளது. லெபனான் சுகாதார அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் தாக்குதல்களில் 10,269 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. லெபனான் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளில், மார்ச் 2 முதல் மே 31 வரை பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடங்கும்.

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்!! வைத்தியர்கள் எச்சரிக்கை!

  • May 31, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் டெங்கு நுளம்புகள் சீராக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் (Rhine-Westphalia)  இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை, பான், யூஸ்கிர்சென் மற்றும் ரைன்-எர்ஃப்ட் மாவட்டங்களில் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேநேரம் வரும் மாதங்களில் இந்த வெப்பமண்டல நுளம்புகள் பெருகக்கூடும் என்று கொலோன் நகரமும் தற்போது எச்சரித்துள்ளது. இந்த நுளம்புகள் டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களைப் வேகமாக பரப்புவதால், சுகாதார அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நுளம்புகள் வெப்பமான வானிலையில் வேகமாக பரவும் […]

உலகம்

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கும் வியட்நாம்!! ஒப்பந்தம் கையெழுத்து!

  • May 31, 2026
  • 0 Comments

இந்தியாவும் வியட்நாமும் மீயொலிவேகப் பயண ஏவுகணை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, இந்தியத் தயாரிப்பான உஅமைப்பை வாங்கும் முதல் வெளிநாடாக வியட்நாம் மாறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 375 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் மீயொலிவேகப் பயண ஏவுகணை அமைப்பு, உலகின் அதிவேக மீயொலிவேக ஏவுகணை அமைப்பாகக் கருதப்படுகிறது. இதன் வேகம் ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பா

குறைந்த நிதி ஒதுக்கீடு!! கடந்தகால படிப்பினைகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

  • May 31, 2026
  • 0 Comments

எபோலா தொற்றை கட்டுப்படுத்த கடந்தகாலத்தோடு ஒப்பிடுகையில் பிரித்தானியா இம்முறை குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-15-ல் £427 மில்லியன் வழங்கிய நிலையில், தற்போது வெறும் 21 மில்லியன் மட்டுமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும் பாதுகாப்பு செலவீனங்களை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், உலகளாவிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான பெக்கி கூப்பர் (Beccy Cooper), 2014/15 […]

இலங்கை செய்தி

நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை திருடிய இருவர் கைது!

  • May 31, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நில வழக்கு தொடர்பான ஆவணங்களை திருடியதாக குற்றச்சாட்டப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.எம். அன்பார் உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பிலான ஆவணம் திருடப்பட்டமை தொடர்பாக மாவட்ட நீதிமன்ற பதிவாளர் ராயப்பு ஜோமெல் ராய் குரூஸ், திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரதேச […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் வெப்ப அலை : கனமழை பெய்ய வாய்ப்பு!

  • May 31, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நிலவிய கடுமையான வெப்ப அலை முடிவுக்கு வரவுள்ளதாக மெட் அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிவிப்பின்படி அடுத்து வரும் இரண்டு நாட்கள் கடுமையான மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் வரைபடங்கள், கனமழை பரவலாகக் காணப்படுவதைக் காட்டுகின்றன; சில பகுதிகளில் மணிக்கு 8 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று இரவு 11.00 மணியில் இருந்து மேற்கிலிருந்து மழை பெய்ய தொடங்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 35.1°C ஆக இருந்த அதிகபட்ச வெப்பநிலைக்குப் பிறகு, […]

ஐரோப்பா செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு பிரான்ஸ் அழைப்பு!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் லெபனானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைக் கைப்பற்றியதோடு, அந்நாட்டின் எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி வருவதை பிரான்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் தற்காப்பு உரிமை உண்டு என்பதை அங்கீகரித்தாலும், லெபனான் நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதனாலும் நியாயப்படுத்த முடியாது என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், அமைதியை […]

உலகம்

எல்லைகளை மூடும் நடவடிக்கை : மறுபரிசீலனை செய்யுமாறு WHO கோரிக்கை!!

  • May 31, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவில் பரவி வரும் எபோலா தொற்று காரணாக அந்நாடுகளுக்கு எதிராக பயணத் தடை விதிப்பது மற்றும் எல்லைகளை மூடுவது தொடர்பில் ஏனைய நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். பயணக் கட்டுப்பாடுகள் நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடும் என்றும், ஒரு திறமையான பொது சுகாதார நடவடிக்கைக்கு […]

உலகம்

ஈரானுக்கும் – சீனாவுக்கும் இடையில் ஆயுதங்கள் கைமாறியதா?

  • May 31, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் இடம்பெறும் மோதலில் அமெரிக்காவின் போர் விமானம் ஒன்றை ((F-15E ஸ்ட்ரைக் ஈகிள்) ஈரானிய படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த விமானத்தை சுட்டு வீழ்த்த சீனாவின் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று புதிய தகவல் கசிந்துள்ளது. ஈரான் பயன்படுத்திய குறித்த ஏவுகணை  தோளில் வைத்து பயன்படுத்தப்படும் சிறந்த ஏவுகணையாக கருதப்படுகிறது. இந்த வகை ஏவுகணைகள், முறையாக மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய வான் பாதுகாப்பு ஆயுதங்கள் அல்லது மேன்பேட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை சுமார் ஏழு அடி நீளமும், […]

உலகம்

நடுகடலில் விபத்துக்குள்ளான படகு : உயிரை காப்பாற்ற கடலில் குதித்த மக்கள்!

  • May 31, 2026
  • 0 Comments

குழந்தைகள் உட்பட சுமார் 150 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று துருக்கி கடற்கரைக்கு அப்பால் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக பலர் கடலில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பிக் பாஸ் டைமண்ட்”  ( “Big Boss Diamond) என்று அழைக்கப்படும் அந்தப் படகு, சுற்றுலா செல்லும் நோக்கில் புறப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த படகில் 20 குழந்தைகள் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பயணிகள் […]