உலகம்

கனடாவில் 200,000 பேருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க தீர்மானம்

தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் கீழ் சுமார் 200,000 பேர் குடியுரிமை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதையும், தற்போதுள்ள குடியேற்றப் பற்றாக்குறைகளைச் சரிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  முன்னெடுப்பின் கீழ், நாட்டில் ஏற்கனவே வசிக்கும் தகுதியுள்ள 200,000 வரையிலான தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கு 2027 ஆம்ஆண்டுக்குள்  நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும்.

இந்த முன்னெடுப்பு தொழிலாளர்கள் மற்றும் மனிதாபிமான விண்ணப்பதாரர்கள் என இரண்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாக குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்