இலங்கை

ஆற்றங்கரைக்கு அருகில் கரையொதுங்கிய மனிதத் தலை – பொலிஸார் தீவிர விசாரணை

  • August 30, 2026
  • 0 Comments

இலங்கை – மொரட்டுமுல்லாவில்  தச்சுப் பட்டறைக்குப் பின்னால்  உள்ள ஆற்றங்கரைக்கு அருகில்  துண்டிக்கப்பட்ட மனிதத் தலையொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. தச்சுப் பட்டறையின் உரிமையாளர் குறித்த தலையை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) தலையை கைப்பற்றியதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மொரட்டுவ பதிலாள் நீதிபதியும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். குறித்த தலையானது மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகவும், விலங்குகளால் பகுதியளவு உண்ணப்பட்டிருக்கலாம் எனவும் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு – பெண் பலி, தாக்குதல்தாரிக்கு வலைவீச்சு

  • August 30, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் ஆரவ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்  ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர். ஆராவ் நகரில் உள்ள  குதிரைப்பந்தைய மைதானத்தில் இந்த இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 22 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 24 முதல் 27 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்தாரி தப்பியோடியுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேநேரம் தாக்குதலுக்கான சூழ்நிலை மற்றும் பின்னணியை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக […]

உலகம்

சேற்று மண்ணில் உயிர்பிழைத்தவர்களை தேடி தொடரும் பயணம்

  • August 30, 2026
  • 0 Comments

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,   540க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. 546 பேரில், 261 பேர் 23 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் என்றும், அவர்களில் 15 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் எல்லையில் உள்ள சேறு மற்றும் இடிபாடுகளை இன்னும் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர், ஆனால் இதுவரை உயிருடன் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையில், நிலச்சரிவு இடிபாடுகளுக்கு மத்தியில் உருவான ஏரியால் […]

உலகம்

ரோபோ நாய்கள் கொள்வனவு – 2 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

  • August 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போது அபாயகரமான இடங்களை ஆய்வு செய்ய ரோபோ நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) 2 மில்லியன் டொலர்வரை செலவிட தீர்மானித்துள்ளது. திட்டமிடப்பட்ட இந்தக் கொள்முதலில், பாஸ்டன் டைனமிக்ஸின் நான்கு கால்கள் கொண்ட ஸ்பாட் ரோபோக்களும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களும் அடங்கும். அதிகாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, அபாயகரமான அல்லது அணுகுவதற்கு கடினமான பகுதிகளுக்குள் நுழைவதற்கு முன்பு, அவற்றை தொலைவிலிருந்து மதிப்பிட […]

இலங்கை

பால் பவுடர், தயிர் மற்றும் யோகர்டின் விலைகள் அதிகரிப்பா? காற்றுவாக்கில் பரவும் தகவல்

  • August 30, 2026
  • 0 Comments

பால் பவுடர், தயிர் மற்றும் யோகர்ட் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி தவறானது என நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறான போலியான செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறும் நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. தவறான அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வது, நுகர்வோர் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதோடு, சந்தையில் தவறான புரிதல்களையும் உருவாக்கும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, சந்தேகத்திற்கிடமான விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் டீசல் ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு

  • August 30, 2026
  • 0 Comments

டீசல் ஏற்றுமதி மீதான தடையை செப்டம்பர் மாதம 30 ஆம் திகதிவரை நீட்டித்து ரஷ்யா அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது. ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்களில் தொடர்ச்சியான பற்றாக்குறை மற்றும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக விநியோகத்தை நிலைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவதன் காரணமாக பல சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. இந்நிலையில் உள்நாட்டு மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு விநியோக சிக்கல் ஏற்பட்டுள்ளமை […]

இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் II – 2026’ என்ற கூட்டுப் பயிற்சி நாளை (31) ஆரம்பமாகி, செப்டம்பர் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை, அமெரிக்க விமானப் படைகளின் கூட்டு பயிற்சி நாளை ஆரம்பம்

  • August 30, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் II – 2026’ என்ற கூட்டுப் பயிற்சி நாளை (31) ஆரம்பமாகி, செப்டம்பர் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி, பேரிடர் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், நிபுணத்துவப் பரிமாற்றத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியில், 275 இலங்கை விமானப்படையினர் 69 அமெரிக்க படையினர் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 3 பங்கேற்பாளர்கள் உட்பட மொத்தம் 347 பேர் […]

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸின் (Anthony Albanese) லேபர் கட்சி (Labor Party) பல தசாப்தங்களாகத் தன் வசம் வைத்திருந்த மாநில நாடாளுமன்றத் தொகுதியை, தீவிர வலதுசாரிக் கட்சியான 'வன் நேஷன்' (One Nation) கைப்பற்றியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலிய வரலாற்றில் அதிரடி திருப்பம்: ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுகட்சி

  • August 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸின் (Anthony Albanese) லேபர் கட்சி (Labor Party) பல தசாப்தங்களாகத் தன் வசம் வைத்திருந்த மாநில நாடாளுமன்றத் தொகுதியை, தீவிர வலதுசாரிக் கட்சியான ‘வன் நேஷன்’ (One Nation) கைப்பற்றியுள்ளது. தேசியக் கீழவையில் தனது முதல் இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவை இக்கட்சி மீண்டும் நிரூபித்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த்தில் (Perth) தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய சீக்ரெட் ஹாபர் (Secret Harbour) தொகுதியில் […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா என்பது தொடர்பாக ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளில், 'ஆதரவு' (Yes) தெரிவிக்கும் தரப்பு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவு’ – ஐஸ்லாந்து சர்வஜன வாக்கெடுப்பு முடிவு என்ன?

  • August 30, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா என்பது தொடர்பாக ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளில், ‘ஆதரவு’ (Yes) தெரிவிக்கும் தரப்பு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. தகுதிபெற்ற 2,70,000 வாக்காளர்களில் முதற்கட்டமாக எண்ணப்பட்ட 87,000 வாக்குகளின் அடிப்படையில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு 51.2 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளை, 48.8 சதவீதமானோர் இதற்கு எதிராக (‘இல்லை’) வாக்களித்துள்ளனர். எனினும், […]

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் நீதித்துறைக்கு ஆபத்து இல்லை

  • August 30, 2026
  • 0 Comments

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “அரசின் சகல தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே எதிர்க்கட்சியினர் உள்ளனர். சகலதையும் எதிர்க்கும் அவர்களின் […]