கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று தலைமன்னாரில் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

மனைவி குத்திக் கொலை: கணவன் கைது: தலைமன்னாரில் பயங்கரம்

  • August 26, 2026
  • 0 Comments

கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று தலைமன்னாரில் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார். தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் பாடல்கள் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ இசைப் தரவரிசைப் பட்டியல்களில் (Music Charts) இடம்பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் AI பாடல்களுக்குத் தடை

  • August 25, 2026
  • 0 Comments

முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் பாடல்கள் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ இசைப் தரவரிசைப் பட்டியல்களில் (Music Charts) இடம்பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, பாடல்கள் தகுதி பெற அவை “பெரும்பாலும் மனிதர்களின் கலைப்படைப்பாக” இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய பதிவுத்துறை சங்கம் (ARIA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கலைத்துறையின் மனித இயல்பை ஊக்குவிக்கவே” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிஜே (DJ) ஜோஷ் பவாஸ் என்பவர், […]

பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை செய்தி

பாதாளகுழு தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது

  • August 18, 2026
  • 0 Comments

பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்குற்றச் செயலுக்கு உதவி புரிந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆண் ஒருவரையும் 23 வயதுடைய பெண் ஒருவரையும் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆகஸ்ட் 17 அன்று கைது செய்தனர். கைது […]

ஐரோப்பா செய்தி

புதிய ஆட்சி மலர்ந்த பின் சிரியா சென்ற முதல் ஐரோப்பிய தலைவர்

  • July 7, 2026
  • 0 Comments

சிரியாவில் ஜனாதிபதி அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் , 2024-ல் பஷர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய பிறகு, அங்கு செல்லும் முதல் ஐரோப்பிய தலைவர் என்ற பெருமையுடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமையன்று டமாஸ்கஸ் சென்றடைந்தார். 13 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் சின்னாபின்னமான சிரியாவை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில், அசாத் காலத்தில் சிரியாவைத் தனிமைப்படுத்திய மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் ஜனாதிபதி ஷாரா நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளார். […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலை கலவரம்: நடந்தது என்ன? விசாரணை தீவிரம்

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 19 கைதிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் 10 பொலிஸ் குழுக்கள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்றிரவுடன் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 700 கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், […]

2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு: மரண எண்ணிக்கை அதிகரிப்பு

  • July 4, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 3 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே 30 ஆயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 52.50 சதவீதமாகும். 142 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு, அதி அபாய டெங்கு […]

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மத்திய-வடக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள (Hawks Nest என்ற இடத்தில், வெள்ளிக்கிழமை Migratory bird ஒன்றிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனையில் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பரவும் பறவைக் காய்ச்சல் குறித்து பதற்றம் வேண்டாம்

  • July 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மத்திய-வடக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள (Hawks Nest என்ற இடத்தில், வெள்ளிக்கிழமை Migratory bird ஒன்றிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனையில் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் யாரும் இதனால் பீதியடைய வேண்டாம் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். Migratory bird கடல் பறவைகளிடம் கண்டறியப்படும் இப்பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தனிப்பட்ட ஒரு சில நிகழ்வுகளா அல்லது வைரஸ் பரவலின் ஒரு பகுதியா என்பதை உறுதிப்படுத்த, துல்லியமான கண்காணிப்பும் பரிசோதனைகளும் மிகவும் […]

நேட்டோ அமைப்பின் தலைவர்கள் அடுத்த வாரம் துருக்கி தலைநகரில் கூடவுள்ளனர். ஐரோப்பா செய்தி

துருக்கியில் ஒன்றுகூடும் நேட்டோ தலைவர்கள்

  • July 3, 2026
  • 0 Comments

நேட்டோ அமைப்பின் தலைவர்கள் அடுத்த வாரம் துருக்கி தலைநகரில் கூடவுள்ளனர். இந்த ராணுவக் கூட்டணியில் அமெரிக்கா தனது பங்களிப்பைக் குறைத்து வரும் சூழலில் முக்கிய முடிவுகளை எடுப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய போர் ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பைப் பெறவில்லை என்பதுடன், பல தலைவர்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். எனினும், நேட்டோ அதிகாரிகளை மேற்கோள் காட்டி Reuters செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெரும்பாலான நேட்டோ கூட்டணி […]

ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய T20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது. செய்தி விளையாட்டு

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதல்

  • July 1, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி இன்று(01) நடைபெறவுள்ளது. ரிவர்​சைடு Riverside Stadium மைதானத்​தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய T20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது. அயர்​லாந்து சுற்​றுப்​பயணம் முடிவடைந்த நிலை​யில் 5T 20 போட்​டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்​காக […]

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இலங்கை செய்தி

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் சுரேஷ் சலே

  • July 1, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (01) கைவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைல் இதயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையைப் பின்பற்றியே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்த்த […]