ஐரோப்பா செய்தி

AI தலைவர்களுடன் உச்சிமாநாடு – மன்னர் சார்லஸ் அழைப்பு

  • September 14, 2026
  • 0 Comments

மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, மன்னர் சார்லஸ் செயற்கை நுண்ணறிவுத் தலைவர்களுடன் ஒரு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாடானது ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ளது. செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மனித கண்ணியத்தை நிலைநிறுத்துவதையும் சமூகங்களுக்குப் பயனளிப்பதையும் உறுதி செய்வதற்காக, டிச்லி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட ஒரு சாசனத்தை நிறுவுவதை ஆராய்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தின் அதிவேகம் குறித்த கவலைகள் காரணமாக, இந்தத் துறை தனது வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் […]

ஐரோப்பா

இந்த ஆண்டு ஹலோவீன் திருவிழா தடைப்பட வாய்ப்பு

  • September 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பதிவான கடும் வெப்ப அலைகளும், தொடர்ச்சியான வறட்சியும் பூசணிப் பயிர்களின் வளர்ச்சியை கடுமையாகப் பாதித்துள்ளமையால் ஹலோவீன் திருவிழா தடைப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே முதல் செப்டம்பர் வரையிலான உச்ச பருவத்தில், இப்பகுதியில் 40 நாட்களுக்கும் மேலாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால், பூசணிகள் சரியாக விளையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டில் பிரபலமான ஹலோவீன் திருவிழாவிற்கு பூசணிக்காய் தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஹாலோவீன் அன்று குடும்பங்கள் தங்கள் பூசணிகளில் வண்ணம் […]

இலங்கை

10,000 தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

  • September 14, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இன்று இரண்டு முக்கிய தொழிலாளர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. முறையான மற்றும் வெளிப்படையான வேலைவாய்ப்பு கட்டமைப்பின் கீழ் ஆரம்பகட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு வழிவகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டன. பாங்காக் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜூலாபுன் அமோர்ன்விவாட் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், ஒப்பந்தங்களின் அமுலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு கூட்டுப் […]

உலகம்

எரிமலை செயற்பாடு – சிலியில் விமான சேவைகள் பாதிப்பு

  • September 14, 2026
  • 0 Comments

சிலியில் உள்ள கட்டானியா விமான நிலையம், இன்று பிற்பகல் 04.00 மணிவரை உள்வரும் விமான சேவைகளை நிறுத்திவைத்துள்ளது. எட்னா மலையிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் எரிமலைச் சாம்பல் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் விமான நிலையம் 05 நாள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தொடர்ச்சியான எரிமலைச் சாம்பல் வெளியேற்றம் விமானப் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது என்றும், விமான இயந்திரங்களுக்குள் உறிஞ்சப்படும் சாம்பல் அவற்றைச் செயலிழக்கச் செய்யக்கூடும் […]

ஐரோப்பா

ரஷ்ய ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா அழைப்பு

  • September 14, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் டீசல் உற்பத்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளதை கிரெம்ளின் வரவேற்றுள்ளார். ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை நிறுத்துமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ட்ரம்ப் நேற்று அழைப்பு விடுத்தார். இந்தத் தாக்குதல்கள் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகவும், அது “உலகைப் பாதிக்கிறது” என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ட்ரம்பின் கூற்றை வரவேற்றுள்ள கிரெம்ளின் செய்தி தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கோவ், “பொதுமக்களின் பொருளாதார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு […]

உக்ரைன் - போலந்து எல்லையருகே ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்கள், உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவை மேலும் அதிகரிப்பதற்கு நேட்டோ இராணுவக் கூட்டமைப்பைத் தூண்டும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) தெரிவித்தார். ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கான ஆதரவை வலுப்படுத்துகிறது நேட்டோ

  • September 14, 2026
  • 0 Comments

உக்ரைன் – போலந்து எல்லையருகே ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்கள், உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவை மேலும் அதிகரிப்பதற்கு நேட்டோ இராணுவக் கூட்டமைப்பைத் தூண்டும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) தெரிவித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் உரையாற்றிய மார்க் ரூட்டே, “நேட்டோ எல்லைக்கு மிக அருகில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விரக்தியையும், பயத்தையும் பீதியையும் விதைக்கும் அவரது எண்ணத்தையுமே காட்டுகின்றன. உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடர்வதில் […]

இலங்கை

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – 17, 18 ஆம் திகதிகளில் முடங்கும் சேவை

  • September 14, 2026
  • 0 Comments

ரயில் பொது மேலாளரின் பதவி குறித்து அரசாங்கம் இன்னும் ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்காததால், முன்னர் அறிவிக்கப்பட்டப்படி செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் திட்டமிட்டப்படி போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள்  தீர்மானித்துள்ளன. ரயில்வே தொழிற்சங்கங்களின் இணை ஒருங்கிணைப்பாளர் கசுன் சாமர ஜயசேகர இன்று (14) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தனை தெரிவித்தார். இந்தப் போராட்ட நடவடிக்கை தொடர்பாக, போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளருக்கும் கூட்டு ரயில்  தொழிற்சங்கங்களின் தலைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே  போக்குவரத்து அமைச்சகத்தின் […]

ஐரோப்பா

உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் பிரித்தானிய வீரர் ஒருவர் பலி

  • September 14, 2026
  • 0 Comments

உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தொன்றில் பிரித்தானியாவின் ஆயுதப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விவரங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகத் தங்களுக்குச் சிறிது அவகாசம் அளிக்குமாறு அவ் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் படை வீரரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

டென்மார்க்கின் சுயாட்சிப் பகுதியான கிரீன்லாந்து உட்பட ஆர்க்டிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் அமைதியான முறையில் தீர்வு காணும் என்று எதிர்பார்ப்பதாக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடரிக்சன் (Mette Frederiksen) திங்கள்கிழமை தெரிவித்தார். ஐரோப்பா செய்தி

கிரீன்லாந்துமீது ட்ரம்ப் குறி: டென்மார்க் கூறுவது என்ன?

  • September 14, 2026
  • 0 Comments

டென்மார்க்கின் சுயாட்சிப் பகுதியான கிரீன்லாந்து உட்பட ஆர்க்டிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் அமைதியான முறையில் தீர்வு காணும் என்று எதிர்பார்ப்பதாக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடரிக்சன் (Mette Frederiksen) திங்கள்கிழமை தெரிவித்தார். டென்மார்க்கால் கிரீன்லாந்தைப் பாதுகாக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி, அதன் கட்டுப்பாட்டை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்தியதன் மூலம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளிலும் – டிரான்ஸ் அட்லாண்டிக் நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். வடக்கு […]

வியன்னாவில் நடைபெறும் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் (IAEA) கூட்டத்தில் ஈரான் அணுசக்தித் தலைவர் பங்கேற்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் 'ஸ்நாப்பேக்' (snapback) தடைகளில் விலக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா தடை விதித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சர்வதேச அணுசக்தி கூட்டத்தில் பங்கேற்க ஈரான் தலைவருக்கு தடை

  • September 14, 2026
  • 0 Comments

வியன்னாவில் நடைபெறும் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் (IAEA) கூட்டத்தில் ஈரான் அணுசக்தித் தலைவர் பங்கேற்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ‘ஸ்நாப்பேக்’ (snapback) தடைகளில் விலக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்குத் தகுந்த எதிர்ப்பை தெஹ்ரான் திங்கள்கிழமை பதிவு செய்துள்ளது. வியன்னாவில் திங்கள்கிழமை தொடங்கிய சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் வருடாந்திரப் பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி (Mohammad Eslami) கலந்துகொண்டு உரையாற்ற இருந்தார். இருப்பினும், தொடக்க நிகழ்வின் […]