கொழும்பின் 03 முக்கிய சிறைச்சாலைகளில் தட்டம்மை நோய் பரவல்
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் தட்டம்மை நோய் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சிறைக் கைதிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு முறையாக அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




