உலகம்

சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

சீனாவின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷான்சி மாகாணத்தின் தையுவான் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில், நேற்று மாலை 05 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.

இதன்போது 05 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 38 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கட்டிட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாமை மற்றும் பணியிடப் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுதல் போன்ற காரணங்களால், இவ்வாறான தீ விபத்துகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்