ஐரோப்பா

ரஷ்ய ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா அழைப்பு

ரஷ்யாவின் டீசல் உற்பத்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளதை கிரெம்ளின் வரவேற்றுள்ளார்.

ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை நிறுத்துமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ட்ரம்ப் நேற்று அழைப்பு விடுத்தார்.

இந்தத் தாக்குதல்கள் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகவும், அது “உலகைப் பாதிக்கிறது” என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் ட்ரம்பின் கூற்றை வரவேற்றுள்ள கிரெம்ளின் செய்தி தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கோவ், “பொதுமக்களின் பொருளாதார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கீவ் ஆட்சிக்கு விடுக்கப்படும் எந்தவொரு அழைப்பும் வரவேற்கப்பட வேண்டியதே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சமீபத்திய மாதங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது உக்ரைன் நடத்திய நீண்ட தூர ஆளில்லா விமானத் தாக்குதல்கள், ரஷ்யாவின் எரிபொருள் உற்பத்தியைக் குறைத்து, நாடு முழுவதும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் பற்றாக்குறையைத் தூண்டியுள்ளது.

ரஷ்ய சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம், மொஸ்கோவிற்கு நிதிச் சுமையை அதிகரிக்க முயல்வதாக உக்ரைன் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது,

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்