அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவார் என அறியமுடிகிறது. அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு 22 இல் அறிவிப்பு

  • September 14, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவார் என அறியமுடிகிறது. சட்டமூலங்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் (பொருட்கோடல்) சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பிவைக்கப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றம் கூடும் வேளையில், சபாநாயகர் தனது அறிவிப்பின்போது மேற்படி தீர்ப்பை வெளிப்படுத்துவது வழமையாகும். இதற்கமைய, 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என்றும், அந்தத் தீர்ப்பை 22 […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் அச்சத்தை விதைக்க புடின் சதித்திட்டம் – ஜெர்மனி எச்சரிக்கை

  • September 14, 2026
  • 0 Comments

உக்ரைன்-போலந்து எல்லைக்கு அருகே   ரயில் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், ஐரோப்பாவில் அச்சத்தை விதைப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் திட்டமிட்டு மேற்கொண்ட  தீவிர நடவடிக்கையாகும் என்று ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “நாம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், ஆத்திரமூட்டல்களுக்கு ஆளாகாமல் இருப்பதும் மிக முக்கியம் என்றார். அதே வேளையில், நம்மைத் தற்காத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பதையும், நிலைமை தீவிரமடைந்தால் ஒருபோதும் பின்வாங்க […]

உலகம்

ஜோர்டானில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட விபத்து – 11 பேர் காயம்

  • September 14, 2026
  • 0 Comments

ஜோர்டானின் அகபாவில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் அமோனியா கசிவால் 11 பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக தெரியவருகிறது. வாயு கசிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றியுள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்பேட்டையில், பழைய பம்ப் அல்லது அழுத்தக் கருவி ஒன்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது  வாயு வெளியேறியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐரோப்பா

அணுசக்தி விரிவாக்க முயற்சியில் பிரான்ஸுடன் கூட்டிணையும் பின்லாந்து

  • September 14, 2026
  • 0 Comments

அணுசக்தித் தடுப்புத் திறனின் (nuclear deterrent) வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியில் பிரான்ஸுடன் பின்லாந்தும் கூட்டிணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவிற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதிப்பாடு மற்றும் உக்ரைன் போரினால் ஏற்படும் பாதுகாப்பு விளைவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்ததை தொடர்ந்து அணுசக்தித் தடுப்பு முயற்சி’ (Forward Nuclear Deterrence Initiative) குறித்த அறிவிப்பை பிரான்ஸ் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் அரசுடன் பின்லாந்தும் கூட்டிணைந்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பின்லாந்து ஜனாதிபதி, “இந்த […]

ஐரோப்பா

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை – புதிய முன்மொழிவை சமர்ப்பித்தது பிரான்ஸ்

  • September 14, 2026
  • 0 Comments

குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வதற்கான முந்தைய சட்டமுயற்சி நாட்டின் உயரிய அரசியலமைப்பு அமைப்பால் நிராகரிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட புதிய முன்மொழிவை பிரெஞ்சு அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அதிபர் இம்மானுவேல் மகரோன் இன்று இதனை அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாட்டை விதிப்பதாகக் கூறி, பிரான்ஸின் அரசியலமைப்பு மன்றம் (Constitutional Council) முந்தைய சட்ட முன்மொழிவை நிராகரித்தது. இந்நிலையிலேயே தற்போது புதிய சட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது எக்ஸ் […]

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் குறித்து சர்வதேச தரத்திற்கு இணங்க, நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை ஐரோப்பா செய்தி

செம்மணி புதைகுழி விவகாரத்தை உன்னிப்பாக அவதானிக்கும் பிரித்தானியா

  • September 14, 2026
  • 0 Comments

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் குறித்து சர்வதேச தரத்திற்கு இணங்க, நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார, கொமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி பணியகத்தின், நாடாளுமன்ற இணைச் செயலாளர் கிறிஸ் எல்மோர் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தனது எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார். செம்மணி கூட்டுப் புதைகுழிகள் தொடர்பான முன்னேற்றங்களை பிரித்தானியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் அவசியம் குறித்து சிறிலங்கா அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். […]

"எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல் ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர்"- இலங்கை செய்தி

இன அழிப்பில் ஈடுபட்டவர்களுடன் மேடையேறுவதா? அர்ச்சுனாவை விளாசித் தள்ளிய சிறீதரன்

  • September 14, 2026
  • 0 Comments

“எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல் ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர்”- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் விசனம் தெரிவித்தார். கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்துக்கான மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்குப் பொதுநோக்கு மண்டபத்தில் […]

இந்திய விமானப் படையின் 'எஸ்-400' (S-400) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, 'ஆப்பரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) இராணுவ நடவடிக்கையின் போது 314 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பாகிஸ்தானின் சிறப்புப் பணி விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் 2025-26 ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

314 KM தொலைவிலிருந்த பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தியது இந்திய ஏவுகணை

  • September 14, 2026
  • 0 Comments

இந்திய விமானப் படையின் ‘எஸ்-400’ (S-400) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) இராணுவ நடவடிக்கையின் போது 314 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பாகிஸ்தானின் சிறப்புப் பணி விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் 2025-26 ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய வான் பாதுகாப்பு வரலாற்றில் மிக நீண்ட தொலைவில் மேற்கொள்ளப்பட்ட தரைவழித் தாக்குதல்களில் ஒன்றாகும். ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில், இந்தத் தாக்குதலானது இந்திய விமானப் படையின் நீண்டதூர வான் […]

பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசாங்கத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பாஜக) புதிய தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளார். இந்தியா கருத்து & பகுப்பாய்வு செய்தி

பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி ராஜதந்திர பலத்தை நிரூபித்த பிரதமர் மோடி

  • September 14, 2026
  • 0 Comments

பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசாங்கத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பாஜக) புதிய தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளார். ஜி20 (G20) மாநாட்டைத் தொடர்ந்து, வெறும் மூன்றாண்டுகளுக்குள் இதுபோன்ற ஒரு முக்கிய உலகளாவிய உச்சிமாநாட்டை வெற்றிகரமாக அமைத்து நடத்தியது மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாகப் போற்றப்படுகிறது. சமீபத்திய அரசியல் பின்னடைவுகளிலிருந்து மீண்டுவர இது உதவும் என்று பாஜக நம்புகிறது. கடந்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கும் பாஜகவிற்கும் சாதகமாக அமையவில்லை. மேற்கு வங்கத்தில் […]

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் Boris Johnson உக்ரைனில் பயணம் செய்த ரயிலுக்குப் பின்னால் வந்த மற்றொரு ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா செய்தி

ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் பிரதமர் Boris Johnson

  • September 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் Boris Johnson உக்ரைனில் பயணம் செய்த ரயிலுக்குப் பின்னால் வந்த மற்றொரு ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், Boris Johnson பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்து நூலிழையில் தப்பினார். உக்ரைன் தலைநகர் கெய்வில் (Kyiv) இருந்து போலந்து நோக்கிப் போரிஸ் ஜான்சன் இரவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எல்லைப் பகுதியில் இந்த ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் ரயில்வே தெரிவித்துள்ளது. போலந்து […]