ஐரோப்பா

உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் பிரித்தானிய வீரர் ஒருவர் பலி

உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தொன்றில் பிரித்தானியாவின் ஆயுதப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் விவரங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகத் தங்களுக்குச் சிறிது அவகாசம் அளிக்குமாறு அவ் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் படை வீரரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்