இலங்கை

‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில் விசாரணை

முன்மொழியப்பட்ட ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன Preethi Padman Surasena மற்றும் நீதிபதிகள் அச்சலா வெங்காப்புலி Achala Wengappuli , சம்பத் அபேகோன்  Sampath Abeykoon ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​ சட்டமூலத்தில் கொண்டுவரப்பட வேண்டிய திருத்தங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதற்கிணங்க, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கடந்த வியாழக்கிழமை (05) தங்கள் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று இந்த மனுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்