எரிமலை செயற்பாடு – சிலியில் விமான சேவைகள் பாதிப்பு
சிலியில் உள்ள கட்டானியா விமான நிலையம், இன்று பிற்பகல் 04.00 மணிவரை உள்வரும் விமான சேவைகளை நிறுத்திவைத்துள்ளது.
எட்னா மலையிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் எரிமலைச் சாம்பல் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் விமான நிலையம் 05 நாள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தொடர்ச்சியான எரிமலைச் சாம்பல் வெளியேற்றம் விமானப் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது என்றும், விமான இயந்திரங்களுக்குள் உறிஞ்சப்படும் சாம்பல் அவற்றைச் செயலிழக்கச் செய்யக்கூடும் என்றும் எரிமலையியல் ஆராய்ச்சியாளர் போரிஸ் பென்கே Boris Behncke எச்சரித்தார்.
மேலும் தொடர்ந்து நடைபெறும் விமான ரத்துகள் மற்றும் பயணிகளை மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடுதல் ஆகியவை கடுமையான உள்ளூர் போக்குவரத்து இடையூறுகளையும், அதிக விலையேற்றத்தையும் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





