இலங்கை

10,000 தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இன்று இரண்டு முக்கிய தொழிலாளர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

முறையான மற்றும் வெளிப்படையான வேலைவாய்ப்பு கட்டமைப்பின் கீழ் ஆரம்பகட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு வழிவகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டன.

பாங்காக் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜூலாபுன் அமோர்ன்விவாட் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், ஒப்பந்தங்களின் அமுலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைக்குமாறு  விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இலங்கை இளைஞர்களுக்கு விரிவான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை புதிய கட்டமைப்பின் கீழ் பணியமர்த்தப்படும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், சலுகைகள் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட தாய்லாந்தின் தொழிலாளர் சட்டத்தின் கீழ் சம உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்படும் என்று தாய்லாந்து தொழிலாளர் துறை அமைச்சர் ஜூலாபுன் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்