மலையகத்தில் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். செய்தி

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு: வான் கதவுகள் திறப்பு

  • October 27, 2026
  • 0 Comments

மலையகத்தில் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், லக்சபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, விமல சுரேந்திர நீர்த்தேக்கம் நேற்று (26) முதல் தொடர்ந்து வான்பாய்ந்து வருகின்றது. தொடர்ந்து பெய்துவரும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வான்பாயும் மட்டத்தை மிகவும் அண்மித்துள்ளதாகவும் குறித்த […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் புயலில் சிக்கிய விமானம் – ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு

  • October 27, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் விமானம் ஒன்று  புயலில் சிக்கிய நிலையில் ஓடுபாதையை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் விமானத்தில் பயணித்த 190 பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து ஜெட்2 நிறுவனத்தின் விமானம், பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது ‘போலோ’ புயல் காரணமாக வீசிய காற்றில் குறித்த விமானம் சிக்கியுள்ளது. இந்நிலையில் தரையிறங்கிய நொடியில் நிலைதடுமாறிய விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் இருந்து நழுவி அருகில் இருந்த புல்வெளிக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல் என மூன்று கப்பல்கள் நேற்று இலங்கையை வந்தடைந்தன. இந்தியா இலங்கை செய்தி

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்கள்

  • October 27, 2026
  • 0 Comments

இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல் என மூன்று கப்பல்கள் நேற்று இலங்கையை வந்தடைந்தன. இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் தீர், ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் சாரதி ஆகிய கப்பல்களில் மொத்தம் 135 பயிற்சி அதிகாரிகள் பயணம் செய்கின்றனர். கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலத்தில், சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி […]

இலங்கை

யாழில் இளம் தாய் உயிர்மாய்ப்பு

  • October 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கண்டாமை, தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் தாயொருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் குறித்த பெண் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தனது முதலாவது ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இதனை அடுத்து, நேற்று (26)  வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டைச் சென்றடைந்த அவர், இரவு 7.30 மணியளவில் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை […]

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணையில் அரசு எந்தவித தலையீடோ அல்லது செல்வாக்கோ செலுத்தவில்லை என்றும், அது முற்றிலும் நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றது என்றும் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இலங்கை செய்தி

செம்மணி விசாரணையில் அரசின் தலையீடு இல்லை

  • October 27, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணையில் அரசு எந்தவித தலையீடோ அல்லது செல்வாக்கோ செலுத்தவில்லை என்றும், அது முற்றிலும் நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றது என்றும் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “செம்மணி விவகாரத்தைப் பொறுத்தவரை கடந்த கால எந்தவொரு அரசும் செய்யாத நடவடிக்கைகளைத் […]

இலங்கை

அர்னாப் புயல் வலுப்பெற்றது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

  • October 27, 2026
  • 0 Comments

மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய “அர்னாப்” (Arnab) சூறாவளி இன்று (27) அதிகாலை மேலும் வலுவடைந்து ‘மிகத் தீவிர புயலாக’ மாற்றமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தீவிர புயலானது வட அகலாங்கு 15.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4° க்கு அருகில், அதாவது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கு திசையில் மையக்கொண்டிருந்ததாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது இன்று பி.ப. 05.30 மணி வரை மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி […]

உலகம்

உலகின் மிக நீளமான தங்க நடைபாதையை திறக்க துபாய் இலக்கு

  • October 27, 2026
  • 0 Comments

இவ்வாண்டின் இறுதிக்குள் 24 காரட் தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதையை திறக்க துபாய் இலக்கு வைத்துள்ளது. சுற்றுலா அனுபவதை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ‘கல்ஃப் டுடே’ (Gulf Today) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் (Dubai Gold District) இந்தத் திட்டம் உலகிலேயே முதன்மையானதாகவும், மிக நீளமான தங்க நடைபாதையாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டின் […]

இலங்கை

சீரற்ற வானிலை – இதுவரை 12 பேர் உயிரிழப்பு

  • October 27, 2026
  • 0 Comments

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திப்பவல் பகுதியில் 195.7 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதுடன், கேகாலை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சீரற்ற வானிலை, இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 12 பேர் […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோர் நெருக்கடிக்கு பிரெக்ஸிட்டே காரணம் – பர்னம் குற்றச்சாட்டு

  • October 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் நெருக்கடிக்கு பிரெக்ஸிட்டே காரணம் என்று பிரதமர் ஆண்டி பர்னம் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால், குடியேற்றத்தின் மீதான கட்டுப்பாடு “பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய ஏற்பாடுகளின் கீழ் முன்பு இருந்ததைப் போல, புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திறனை ஐக்கிய இராச்சியம் இழந்ததாலேயே சிறிய படகுகள் நெருக்கடி உருவானது என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் பிரித்தானியா மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர வேண்டும் என வலியுறுத்திய அவர், இது தொடர்பில் பொதுமக்கள் […]

ஐரோப்பா

ட்ரோன் அச்சுறுத்தல் – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

  • October 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 777 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் 6,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​அதன் வலது இறக்கைக்கு மேலே சுமார் 50 அடி உயரத்தில் ட்ரோன் ஒன்றை எதிர்கொண்டதை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொருள் பளபளப்பாகவும், உலோகத் தன்மையுடனும், பிரதிபலிக்கும் தன்மையுடனும் காணப்பட்டதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தற்காப்பு நடவடிக்கை எதுவும் […]