இலங்கை

சீரற்ற வானிலை – இதுவரை 12 பேர் உயிரிழப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திப்பவல் பகுதியில் 195.7 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதுடன், கேகாலை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.

இந்நிலையில் சீரற்ற வானிலை, இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும்  நாட்டின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 206 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 2,826 குடும்பங்களைச் சேர்ந்த 10,311 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 28 வீடுகள் முழுமையாகவும், 1,807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் 3 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்