உலகம்

பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம் தம்பதியர் இந்தியா வருகை

பிரித்தானியாவின் இளவரசி கேட், மற்றும் இளவரசர் வில்லியம் ஆகிய இருவரும் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ  விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் இளவரசர் வில்லியம் முன்னெடுக்கும் வருடாந்திர ‘எர்த்ஷாட் பரிசு’ (Earthshot Prize) வழங்கும் விழாவில் அவர்கள் பங்குக் கொள்ளவுள்ளனர்.

அதேநேரம் புற்றுநோய் பாதிப்பிற்கான சிகிச்சைக்கு பிறகு இளவரசி கேட் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணமாகவும் இது அமையவுள்ளது.

இதேவேளை தனது தந்தை மன்னர் சார்லஸைப் போலவே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில், இளவரசர் வில்லியம் எர்த்ஷாட் பரிசு அமைப்பை தொடங்கினார்.

இந்த அமைப்பின் மூலம், தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து வெற்றியாளர்களுக்கு, அவர்களின் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக தலா 1 மில்லியன் பவுண்டுகள் (1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்