இலங்கை

பிரித்தானியாவை உலுக்கிய புயல் – இருவர் பலி

  • October 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை தாக்கிய போயலோ Boelo  புயல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். மேற்படி புயல் தாக்கத்தினால் மரங்கள்  முறிந்து விழுந்ததில் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. இதற்கமைய 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் 60 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 84 மைல் வேகத்தில் வீசிய உச்சபட்ச பலத்த காற்றினால் லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன், விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் மூத்த மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

  • October 26, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள மூத்த மருத்துவர்கள் இன்று  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். பிரித்தானிய  மருத்துவச் சங்கம் (BMA) இதனை அறிவித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் இவெட் கூப்பர் Yvette Cooper, ஊதியம் மற்றும் பணிச் சூழல் குறித்த முறையான பேச்சுவார்த்தைகளை நான்கு வாரங்களுக்குள் நடத்த ஒப்புக்கொண்டால், இந்த வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க முடியும் என்று அச்சங்கம் நிபந்தனை விதித்துள்ளது. வேலைநிறுத்த காலத்திலும் அவசர மருத்துவச் சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றும், இதற்காக, கிறிஸ்துமஸ் தினத்தன்று பின்பற்றப்படும் பணியாளர் கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

பிரான்ஸில் பல வாரங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு தீர்வு

  • October 26, 2026
  • 0 Comments

பிரான்ஸில் பல வாரங்களாக நீடித்து வரும்  போராட்டங்களுக்குத் தீர்வாக, தனது அரசாங்கம் சில புதிய நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உறுதியளித்துள்ளார். அதே வேளையில், ரும் நாட்களில் மேலும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதையும் அவர் ஒப்புக்கொண்டார். மார்சேய் நகரில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய  மக்ரோன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உள்துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு, உயர்நிலைப் பாடசாலை மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு கூடுதல் வளங்கள் தேவை என்றும், […]

ஐரோப்பா

சூடானில் போர் புரிந்த தலைவர்கள் மீது பிரித்தானியா தடை விதிப்பு

  • October 26, 2026
  • 0 Comments

சூடான் போரின் போது பணியாற்றிய 15 இராணுவத் தளபதிகள், போராளிக் குழுத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாலியல் வன்முறை, சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை காரணங்களாக குறிப்பிட்டே இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவின் கீழ் விரைவு ஆதரவுப் படைகள் மற்றும் சூடான் ஆயுதப் படைகளின் தளபதிகள், அத்துடன் இராணுவத்துடன் கூட்டணி வைத்துள்ள ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் அடங்குகின்றனர். சூடான் போரின் மையப் புள்ளியாக மாறிய […]

உலகம்

துணை இராணுவ படையின் தாக்குதல் – சூடானில் மின்சாரம் துண்டிப்பு

  • October 26, 2026
  • 0 Comments

தென்கிழக்கு சூடானில் உள்ள மின் நிலையங்களை துணை ராணுவ படையினர் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த தாக்குதல் ஒட்டுமொத்த தேசிய மின் கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சூடான் எலக்ட்ரிசிட்டி ஹோல்டிங் நிறுவனம் அறிவித்துள்ளது. மின்சார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், மோதலால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களின் சுகாதாரம் மற்றும் பிற சேவைகளுக்கு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் டிவியில் இயங்கும் இன்ஸ்டாகிராம்

  • October 26, 2026
  • 0 Comments

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் இப்போது ஆப்பிள் டிவியில் கிடைக்கிறது. இதன் மூலம் பயனர்கள் முதன்முறையாக ரீல்ஸ், நீண்ட வீடியோக்கள் மற்றும் நேரலை நிகழ்ச்சிகளைத் தங்கள் தொலைக்காட்சியில் பார்க்க முடியும். இந்தச் செயலி, பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான படைப்பாளர்களின் வீடியோக்களைப் பார்க்கவும், புதிய உள்ளடக்கங்களைக் கண்டறியவும், மேலும் வெவ்வேறு சாதனங்களில் தொடர்ந்து பார்க்கவும் அனுமதிக்கிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வீடியோக்களைப் பார்ப்பதை ஒரு பகிரப்பட்ட அனுபவமாக மாற்றுவதற்காக இந்த டிவி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இன்ஸ்டாகிராம் கூறுகிறது. […]

ஐரோப்பா

ஹாலோவீன் வாரம் – பிரான்ஸில் போராட்டத்திற்கு அழைப்பு

  • October 26, 2026
  • 0 Comments

வரவுள்ள வார இறுதி நாட்களிலும் பிரெஞ்சு தெருக்களில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டின்  உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் தெரிவித்துள்ளார். வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹாலோவீன் மாலைப் பொழுது பாரம்பரியமாகவே சற்று கலகலப்பாக இருக்கும். அது மீண்டும் சிக்கலாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் பல வாரங்களாக தொடரும் போராட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவே […]

இலங்கை முக்கிய செய்திகள்

மோசமான வானிலை – பாடசாலைகளை மூட தீர்மானம்

  • October 26, 2026
  • 0 Comments

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், G.C.E O/L  அழகியல் பாடத்திற்கான செய்முறைத் பரீட்சைகள் முன்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், லங்காஷயர் கவுண்டி Lancashire அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனினும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அவர் இதுவரை உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை. செய்தி விளையாட்டு

45 வயதை நெருங்கும் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி: புதிய ஒப்பந்தம் வழங்காத லங்காஷயர்

  • October 26, 2026
  • 0 Comments

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், லங்காஷயர் கவுண்டி Lancashire அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனினும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அவர் இதுவரை உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை. 2001ஆம் ஆண்டு முதல் லங்காஷயர் அணிக்காக விளையாடிவந்த 44 வயதான ஆண்டர்சனுக்கு, 2027ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் வழங்கப்படமாட்டாது என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், “முடிவு இப்படியாக அமைந்திருக்காவிட்டால் நன்றாக […]

தென்கொரியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற கண்ணிவெடிச் சம்பவத்தை தென்கொரியா திட்டமிட்டு உருவாக்கியதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வடகொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கண்ணிவெடி விவகாரம்: தென்கொரியா மீது ஐ.நா.வில் வடகொரியா குற்றச்சாட்டு

  • October 26, 2026
  • 0 Comments

தென்கொரியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற கண்ணிவெடிச் சம்பவத்தை தென்கொரியா திட்டமிட்டு உருவாக்கியதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வடகொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி, இரு கொரியாக்களுக்கும் இடையிலான இராணுவமயமற்ற வலயத்தில் (DMZ) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் தென்கொரிய இராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு வடகொரியப் படையினரால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளே காரணம் என தென்கொரியா தெரிவித்திருந்தது. […]