உலகம்

பாகிஸ்தானில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் – 16 பேர் பலி

  • September 18, 2026
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தை குறிவைத்து தற்கொலைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில்  05 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 11 பொதுமக்கள் உள்ளடங்களாக 16 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத சடங்குகளில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு அந்த இடத்திற்குள் நுழைந்த […]

இந்தியா

14 மாநிலங்களில் சோதனை – பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாத செயற்பாட்டாளர்கள் கைது

  • August 17, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட “பயங்கரவாதச் செயல்பாட்டாளர்களை” இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, 14 இந்திய மாநிலங்களில் விசேட ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போதே இந்த கைதுகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ISI) ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவே இவ்வாறு கைது […]

உலகம் செய்தி

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்

  • August 7, 2026
  • 0 Comments

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இன்று ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன. இந்நிகழ்வு சவுதி அரேபியாவின் தலைநகர் ஜெட்டாவில் இடம்பெறவுள்ளது. போர்கள், மோதல்கள் மற்றும் இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஒப்பந்தம் ஒன்றை எட்ட  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் ” நீண்ட காலமாக விவாதத்தில் […]

உலகம்

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து – 32 தொழிலாளர்கள் மரணம்

  • July 31, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில்    நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற  வெடி விபத்தில் குறைந்தது 32  தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 10 பேர் காணாமல்போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவின் (Quetta) புறநகர்ப் பகுதியில் நேற்று இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வெடி விபத்தானது மீத்தேன் வாயுவின் தேக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவசரகால மீட்புக் குழுவினர் வருகை தந்ததுடன், ஆரம்பத்தில் 07 உடல்களை மீட்டுள்ளனர். அதைத் […]

உலகம்

பாகிஸ்தானில் பொலிஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சமர் – 11 அதிகாரிகள் உயிரிழப்பு

  • July 30, 2026
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் இரவோடு இரவாக நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பொலிஸ் நிலையத்தை கனரக ஆயுதங்களால் தாக்கியுள்ளதுடன்,  அங்கு வந்துகொண்டிருந்த கூடுதல் படையினரை பதுங்கியிருந்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகள் ஒரு மணி நேரம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். […]

உலகம்

அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணியை கோரும் பாகிஸ்தான்

  • July 23, 2026
  • 0 Comments

போர் மத்தியஸ்தம் செய்வதற்கு பிரதியீடாக பாகிஸ்தான் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி நிலைப்படுத்தல் வசதியை அமெரிக்காவிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தால் பண நெருக்கடியில் சிக்கியுள்ள தெற்காசியப் பொருளாதாரத்திற்கு இது உயர் நாடியாக இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்டிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இஸ்லாமாபாத், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே 10 பில்லியன் டொலர் மதிப்பிலான, ஐந்து ஆண்டுகள் […]

உலகம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் பொலிஸார் மோதல் -09 பேர் பலி

  • July 7, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் நேற்று இரவு முழுவதும் இடம்பெற்ற மோதலில் 09 பாகிஸ்தான் பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஜியாரத் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாக ஜியாரத் துணை ஆணையர் அப்துல் குத்தூஸ் அச்சாக்சாய் (Ziarat Abdul Quddus Achakzai) தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்ட காவலர்களின் உடல்கள் […]

உலகம்

பாகிஸ்தானில் சோகம் – இஸ்லாமாபாத் சென்ற 40 பேர் பலி!

  • July 3, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று பேருந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து, மாகாணத் தலைநகரான குவெட்டாவிலிருந்து தேசியத் தலைநகரான இஸ்லாமாபாத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 48 பயணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

உலகம்

ஆப்கானிஸ்தானில் தரைவழித் தாக்குதல்களை தொடங்கியது பாகிஸ்தான் -29 பேர் பலி

  • June 29, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தரைவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது இந்த தாக்குதல்களில் 29  பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் மோதல் போக்கு தற்போது தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்லாமாபாத் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதாக பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களின் விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். “பக்தியா, பக்திகா மற்றும் குனார் […]

உலகம்

பாகிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • June 27, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 35 கிலோமீட்டர் (22 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் எவ்வித உயிரழப்புகளும் ஏற்படவில்லை என்றும், ஏனைய சேதங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகளின் மோதல் மண்டலத்தில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தத் […]