செய்தி

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு: வான் கதவுகள் திறப்பு

மலையகத்தில் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், லக்சபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, விமல சுரேந்திர நீர்த்தேக்கம் நேற்று (26) முதல் தொடர்ந்து வான்பாய்ந்து வருகின்றது.

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வான்பாயும் மட்டத்தை மிகவும் அண்மித்துள்ளதாகவும் குறித்த பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி