இலங்கை

யாழில் இளம் தாய் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் – கண்டாமை, தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் தாயொருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்

குறித்த பெண் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தனது முதலாவது ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

இதனை அடுத்து, நேற்று (26)  வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டைச் சென்றடைந்த அவர், இரவு 7.30 மணியளவில் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்