உலகம்

உலகின் மிக நீளமான தங்க நடைபாதையை திறக்க துபாய் இலக்கு

இவ்வாண்டின் இறுதிக்குள் 24 காரட் தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதையை திறக்க துபாய் இலக்கு வைத்துள்ளது.

சுற்றுலா அனுபவதை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

‘கல்ஃப் டுடே’ (Gulf Today) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் (Dubai Gold District) இந்தத் திட்டம் உலகிலேயே முதன்மையானதாகவும், மிக நீளமான தங்க நடைபாதையாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபாதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டின் வணிகப் பிரிவின் மூத்த இயக்குனர் ரஷித் அல் ஹர்முதி (Rashid Al Harmoudi) தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதோடு, தங்க வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கான உலகளாவிய மையமாக துபாயின் நிலையை மேலும் வலுப்படுத்தும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்