ஐரோப்பா

ட்ரோன் அச்சுறுத்தல் – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 777 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானம் 6,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​அதன் வலது இறக்கைக்கு மேலே சுமார் 50 அடி உயரத்தில் ட்ரோன் ஒன்றை எதிர்கொண்டதை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பொருள் பளபளப்பாகவும், உலோகத் தன்மையுடனும், பிரதிபலிக்கும் தன்மையுடனும் காணப்பட்டதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் தற்காப்பு நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும்,   திட்டமிட்டபடி நியூயார்க்கிற்கான தனது பயணத்தை நிறைவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம், இங்கிலாந்து ஏர்பிராக்ஸ் வாரியத்தின் மாதாந்திர அறிக்கையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற அனைத்து பாதுகாப்புச் சம்பவங்களும் அதிகாரப்பூர்வ விசாரணைக்காகப் பதிவு செய்யப்படும் என்று பிரித்தானியா ஏர்வேஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்